குளோரைல் டெட்ராபெர்குளோரேட்டோ ஆரேட்டு

வேதிச் சேர்மம்

குளோரைல் டெட்ராபெர்குளோரேட்டோ ஆரேட்டு (Chloryl tetraperchloratoaurate) என்பது ClO2Au(ClO4)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். குளோரைல் நேர்மின் அயனியும் டெட்ராபெர்குளோரேட்டோ ஆரேட்டு எதிர்மின் அயனியும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. ஆரஞ்சு நிறத் திண்மமான இது காற்றில் எளிதாக நீராற்பகுப்புக்கு உட்படுகிறது.[1]

குளோரைல் டெட்ராபெர்குளோரேட்டோ ஆரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • தங்கம்(III) பெர்குளோரேட்டு இருகுளோரின் ஆறாக்சைடு
இனங்காட்டிகள்
453509-25-6 Y
InChI
  • InChI=1S/Au.4ClHO4.ClO2/c;4*2-1(3,4)5;2-1-3/h;4*(H,2,3,4,5);/q+3;;;;;+1/p-4
    Key: ACLJBRMVWTXQHV-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
  • O=Cl[O+].O=Cl(=O)(=O)[O-][Au+3]([O-]Cl(=O)(=O)=O)([O-]Cl(=O)(=O)=O)[O-]Cl(=O)(=O)=O
பண்புகள்
ClO2Au(ClO4)4
வாய்ப்பாட்டு எடை 662.22 கி/மோல்
தோற்றம் ஆரஞ்சு நிறப் படிகங்கள்[1]
அடர்த்தி 3.18 கி/செ.மீ3
உருகுநிலை 48 °C (118 °F; 321 K) (சிதைவடையும்)
வினைபுரியும்
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சரிவச்சு படிகக் கட்டமைப்பு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு தொகு

தங்கம் உலோகம், தங்கம்(III) குளோரைடு அல்லது குளோரோ ஆரிக் அமிலத்தை டைகுளோரின் எக்சாக்சைடு சேர்மத்தைப் பயன்படுத்தி ஆக்சிசனேற்றம் செய்து குளோரைல் டெட்ராபெர்குளோரேட்டோ ஆரேட்டு தயாரிக்கப்படுகிறது:[1][2]

2 AuCl3 + 8 Cl2O6 → 2 ClO2Au(ClO4)4 + 6 ClO2 + 3 Cl2.

வினைகள் தொகு

தங்கம்(III) பெர்குளோரேட்டின் உற்பத்திக்காக இந்த சேர்மத்தை சூடாக்குவதன் மூலம் முயற்சி செய்யப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக ஓர் ஆக்சி-பெர்குளோரேட்டோ வழிப்பெறுதியை உருவாக்கியது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 Frédérique Cunin; Catherine Deudon; Frédéric Favier; Bernard Mula; Jean Louis Pascal (2002). "First Anhydrous Gold Perchlorato Complex: ClO2Au(ClO4)4. Synthesis and Molecular and Crystal Structure Analysis" (in en). Inorganic Chemistry 41 (16): 4173–4178. doi:10.1021/ic020161z. 
  2. Jean-Louis Pascal; Frédéric Favier (1998). "Inorganic perchlorato complexes" (in en). Coordination Chemistry Reviews 178–180: 865-902. doi:10.1016/S0010-8545(98)00102-7.