குளோரோபாரம்

(குளோரோஃபார்ம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குளோரோபாரம் (chloroform) அல்லது முக்குளோரோமீத்தேன் (trichloromethane) என்பது ஒரு நிறமற்ற, இனிய மணம் உள்ள அடர்த்தியான கரிமச் சேர்மம் ஆகும். இதன் வாய்பாடு: CHCl3. நான்கு குளோரோமீத்தேன்களில் குளோரோபாரமும் ஒன்றாகும்.[1] நிறமற்ற, மணமியங்களைப் போன்று இனிய மணமுடைய, தண்ணீரைவிட அடர்த்தியான திரவ நிலையிலுள்ள இந்த டிரைகுளோரோமீத்தேன் ஓரளவிற்கு தீங்கானதாகக் கருதப்படுவதால், ஆண்டுதோறும் குளோரோபாரம் பல மில்லியன் தொன்கள் தெவலான் மற்றும் குளிர் பதனூட்டிகளின் முன்னோடியாகத் தயாரிக்கப்பட்டாலும், குளிர் பதனூட்டிகளில் இதன் பயன்பாடு படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படுகின்றது[1]. குளோரோபாரம் முதன் முதலாக 1831-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. எடின்பர்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இசுகாட்லாந்து மருத்துவர் சர் சேம்சு சிம்சன் முதலில் குளோரோபாரமை 1853-ஆம் ஆண்டில் மயக்க மருந்தாக பயன்படுத்தினார்.[2]

குளோரோபாரம்
Chloroform in its liquid state shown in a test tube
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குளோரோபாரம்
முறையான ஐயூபிஏசி பெயர்
முக்குளோரோ மீத்தேன்
வேறு பெயர்கள்
ஃபார்மைல் முக்குளோரைடு, மீத்தேன் முக்குளோரைடு, மீத்தைல் முக்குளோரைடு, மெத்தீனைல் முக்குளோரைடு, டிசிஎம், ஃபிரான் 20, ஆர்-20 , யுஎன் 1888
இனங்காட்டிகள்
67-66-3 Y
ChEBI CHEBI:35255 Y
ChEMBL ChEMBL44618 Y
ChemSpider 5977 Y
EC number 200-663-8
InChI
  • InChI=1S/CHCl3/c2-1(3)4/h1H Y
    Key: HEDRZPFGACZZDS-UHFFFAOYSA-N Y
  • InChI=1/CHCl3/c2-1(3)4/h1H
    Key: HEDRZPFGACZZDS-UHFFFAOYAG
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C13827 Y
பப்கெம் 6212
வே.ந.வி.ப எண் FS9100000
SMILES
  • ClC(Cl)Cl
UNII 7V31YC746X Y
பண்புகள்
CHCl3
வாய்ப்பாட்டு எடை 119.37 g·mol−1
தோற்றம் நிறமற்ற திரவம்
அடர்த்தி 1.483 கி/செமீ3
உருகுநிலை −63.5 °C (−82.3 °F; 209.7 K)
கொதிநிலை 61.2 °C (142.2 °F; 334.3 K)
0.8 கி/100 மிலி (20 °செ)
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.4459
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் தீங்கானது (Xn), எரிச்சலூட்டக்கூடியது (Xi), புற்றீணி
R-சொற்றொடர்கள் R22, R38, R40, R48/20/22
S-சொற்றொடர்கள் (S2), S36/37
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பிடிக்காதது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references
சோதனைக் குழாயில் நீர்ம நிலையில் உள்ள குளோரோபாரம்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 M. Rossberg et al. “Chlorinated Hydrocarbons” in Ullmann’s Encyclopedia of Industrial Chemistry, 2006, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a06_233.pub2
  2. "Chloroform-CHCl3". பார்க்கப்பட்ட நாள் 2012-02-25.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரோபாரம்&oldid=3241080" இலிருந்து மீள்விக்கப்பட்டது