குவாக்காடா

வங்காளதேச நகரம்

குவாக்காடா (Kuakata) தெற்கு வங்காளதேசத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். பரந்த கடல் கடற்கரைக்கு இந்நகரம் பெயர் பெற்றது.[1] குவாக்காடா கடற்கரை 18 கிலோமீட்டர் நீளமும் (11 மைல்), 3 கிலோமீட்டர்கள் அகலமும் (1.9 மைல்) கொண்ட ஒரு மணல் பரப்பாகும். இக்கடற்கரையில் இருந்து வங்காள விரிகுடாவில் சூரிய உதயம் மற்றும் சூரிய மறைவு இரண்டையும் தடையின்றி பார்க்க முடியும்.[1]

குவாக்காடா
Kuakata
কুয়াকাটা
மேலிருந்து: மீன் பிடித்தல், சூரிய மறைவு, புத்த கோயில்,கடற்கரை, மாங்குரோவ் காடு , கிராண்டு உணவு விடுதி
அடைபெயர்(கள்): கடல் மகள் (সাগরকন্যা)
ஆள்கூறுகள்: 21°49′16″N 90°07′11″E / 21.82111°N 90.11972°E / 21.82111; 90.11972
நாடுவங்காளதேசம்
கோட்டம்பரிசால் கோட்டம்
மாவட்டம்பதுவாகாளி மாவட்டம்
துணை மாவட்டம்கலாபரா
நேர வலயம்ஒசநே+6 (வ.சீ.நே)

சொற்பிறப்பியல் தொகு

கிணறு என்பதற்கான வங்காள மொழிச் சொல்லான குவா' என்ற சொல்லிலிருந்து குவாக்காடா என்ற பெயர் பெறப்பட்டுள்ளது. ஆரம்பகால இரக்கைன் குடியேறிகளால் (பர்மிய பழங்குடியினர்) குடிநீரை சேகரிக்கும் தேடலில் கடலோரத்தில் கிணறு தோண்டப்பட்டது.[2] பர்மிய தீவிரவாதிகளால் அரக்கானில் இருந்து (மியான்மர்) வெளியேற்றப்பட்ட பின்னர் இவர்கள் 18 ஆம் நூற்றாண்டில் குவாக்காடா கடற்கரையில் தரையிறங்கினர். பின்னர், இரக்கைன் பழங்குடியினரின் சுற்றுப்புறங்களில் தண்ணீருக்காக கிணறுகளை தோண்டுவது ஒரு பாரம்பரியமாகிவிட்டது.

நிலவியல் தொகு

குவாக்காடா, பதுகாலி மாவட்டத்தில் உள்ள கலபாரா துணை மாவட்டத்தில் அமைந்துள்ளது.[3] சுமார் 320 கிலோமீட்டர்கள் (200 mi) தலைநகர் டாக்காவின் தெற்கேயும், மாவட்ட தலைமையகத்தில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர்கள் (43 mi) தொலைவிலும் குவாக்காடா அமைந்துள்ளது.[1]

மக்கள்தொகையியல் தொகு

2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட வங்காளதேச மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, குவாக்காட்டாவில் 2,065 குடும்பங்கள் மற்றும் 9,077 மக்கள் வசித்தனர்.[4]

பண்பாடு தொகு

குவாக்காடா கடற்கரை
Kuakata Beach
சூரியன் உதயம்
சூரியன் மறைவு

குவாக்காடா இந்து மற்றும் பௌத்த சமூகத்தினரின் புனித யாத்திரை இடமாகும். 'ரசு பூர்ணிமா' மற்றும் 'மகி பூர்ணிமா' திருவிழாக்களில் கலந்துகொள்ள எண்ணற்ற பக்தர்கள் இங்கு வருகிறார்கள். இந்த சமயங்களில் யாத்ரீகர்கள் வளைகுடாவில் புனித நீராடுகிறார்கள் மற்றும் பாரம்பரிய கண்காட்சிகளில் பங்கேற்கிறார்கள்.[1] கௌதம புத்தரின் சிலை மற்றும் 200 ஆண்டுகள் பழமையான இரண்டு கிணறுகள் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமையான புத்த கோவில் போன்றவற்றை இங்கு காணலாம்.

சுற்றுலா தொகு

குவாக்காடா நகரம் குவாக்காடா கடற்கரை என்று பெயரிடப்பட்ட கடல் கடற்கரையைக் கொண்டுள்ளது. காக்சு பசார் கடற்கரை போன்ற பன்னாட்டு அங்கீகாரம் இல்லாவிட்டாலும், பல சுற்றுலாப் பயணிகள் கடற்கரையைப் பார்க்க இந்த இடத்திற்கு வருகிறார்கள். இதுதவிர பல சுற்றுலா இடங்கள் இங்குள்ளன -

  • குவாக்காடா தேசியப் பூங்கா
  • குவாக்காடா எக்கோபார்க்
  • பட்ரா காடு
  • குவாக்காட்டாவின் கிணறு
  • சிமா புத்த மடாலயம்
  • கெரனிபாராவின் இரக்கைன் குடியேற்றம்
  • அலிபூர் துறைமுகம்
  • மிசுரிபாரா புத்த மடாலயம்
  • கங்காமதி காடு

காட்சியகம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "Tourist Attractions in Bangladesh". Bangladesh Parjatan Corporation. Archived from the original on 19 July 2011.
  2. Aouwal, Abdul (2016). "Kuakata National Park of Bangladesh". Ontaheen. Archived from the original on 12 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 26 June 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "NGA GeoName Database". National Geospatial Intelligence Agency. பார்க்கப்பட்ட நாள் 9 January 2016.
  4. "Population Census 2011: Patuakhali Table C-01" (PDF). Bangladesh Bureau of Statistics. Archived from the original (PDF) on 13 November 2014. பார்க்கப்பட்ட நாள் 11 July 2014.

புற இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
குவாக்காடா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாக்காடா&oldid=3929123" இலிருந்து மீள்விக்கப்பட்டது