கூட்டுப்புழு

உருமாற்றம் அடையும் சில பூச்சிகளின் வாழ்க்கை நிலை

கூட்டுப்புழு (Pupa) எனப்படுவது சில பூச்சிகளின் வாழ்க்கை வட்டத்தில், உருமாற்றம் வழியாக உருவாகும் குடம்பி நிலைக்கும், முதிர்நிலைக்கும் இடைப்பட்ட ஒரு விருத்தி நிலையாகும். இந்நிலையில் அந்த உயிரினம் உணவு உட்கொள்ளல் உட்படத் தனது தொழிற்பாடுகளை நிறுத்தி, பொதுவாக அசைவற்ற நிலையில் இருக்கும். இது மேலும் ஒரு கடினமான பாதுகாப்பு உறையால் மூடப்பட்ட நிலையில் காணப்படும். இந்த உறையை இந்த நிலைக்கு முன்னருள்ள குடம்பிகளே உருவாக்கும். அத்துடன் இவை பொதுவாக தான் வாழும் சூழலில் பாதுகாப்புடன் இருப்பதற்காக உருமறைப்பு (camouflage) செய்யக்கூடிய தன்மையையும் கொண்டிருக்கும்.

Melolontha melolontha இன் கூட்டுப்புழு

இந்த நிலையானது முளையம், குடம்பி, கூட்டுப்புழு, முதிர் நிலை ஆகிய நான்கு உயிர் வளர்ச்சிப் படிநிலைகளைக் கொண்ட முழு உருமாற்றமடையும் பூச்சிகளிலேயே காணப்படும். இந்தக் கூட்டுப்புழுப் பருவம் வெவ்வேறு இனங்களில் வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கப்படும். இந்தக் கூட்டுப்புழு நிலையிலேயே உடலில் இனப்பெருக்கத்திற்குத் தேவையான உறுப்புக்கள் விருத்தியடையும்.

படத் தொகுப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டுப்புழு&oldid=2745403" இலிருந்து மீள்விக்கப்பட்டது