கூலும்

மின்னேற்றத்தின் சர்வதேச நியம அலகு

கூலும் (coulomb) அல்லது கூலோம் (ஈழத்து வழக்கு) என்பது மின்மத்தை அளக்கும் அனைத்துலக அலகு (SI அலகு, ஆனால் அடிப்படை அனைத்துலக முறை அலகுகள் (SI) அலக்குகள் 7 இல் ஒன்று அல்ல). இந்த அலகின் அனைத்துலகக் குறியீடு : C. கூலும் என்பது 18 ஆம் நூற்றாண்டில் மின்னியல் துறையில் முன்னணி ஆய்வுகள் செய்த சார்லசு அகுசிட்டின் டி கூலும் (Charles-Augustin de Coulomb) என்னும் பிரான்சிய அறிவியலாளரின் நினைவாக சூட்டப்பட்ட பெயர் ஆகும்.

கூலும்
அலகு முறைமைஅனைத்துலக முறை அலகுகள்
அலகு பயன்படும் இடம்மின்மம்
குறியீடுC
பெயரிடப்பட்டதுசார்லசு அகுசிட்டின் டி கூலும்
அலகு மாற்றங்கள்
1 C இல் ...... சமன் ...
   SI அலகுகள்   1 A s
   CGS அலகுகள்   2997924580 statC
   அணு அலகுகள்   6.24150965(16)×1018 e

வரையறை தொகு

ஒரு கூலும் என்பது ஓர் ஆம்பியர் மின்னோட்டம் ஒரு நொடி நிகழும் பொழுது நகர்த்தப்படும் மொத்த மின்மத்தின் அளவு. வேறு விதமாகக் கூறுவதென்றால் ஒரு பாராடு (Farad) மின்தேக்குமை கொண்ட மின்தேக்கியில் ஒரு வோல்ட்டு மின்னழுத்தம் கொள்ளத் தேவையான மின்ம அளவு. கூலும் என்பது அடிப்படை அனைத்துலக முறை அலகுகளாகிய ஆம்பியர், நொடி ஆகியவற்றில் இருந்து வருவிக்கும் ஓர் முக்கியமான SI அலகு. 1 கூலும் = 1 ஆம்பியர் x 1 நொடி.

விளக்கம் தொகு

அடிப்படையான இயற்பியல் பண்புகளை வரையறை செய்யும் பொழுது, இயற்கையில் நிகழும் நிலையான ஓர் இயக்கத்தின் அடிப்படையில் விளக்குவது உறுதி தருவதாகும். ஆனால் கூலும் என்பது இவ்வாறு உறுதி செய்யப்படவில்லை. ஒரு கூலும் என்பது 6.241 509 629 152 65×1018 மடங்கு நேர்மின்னியின் மின்ம அளவு ஆகும்.

கூலும் விதியின் படி, +1 கூலும் ( +1 C) அளவுடைய இரு புள்ளி மின்மங்களுக்கு இடையே ஒரு மீட்டர் இடைவெளி இருந்தால், அவற்றிற்கு இடையே 9×109 N, விலகு விசை இருக்கும். அதாவது ஏறத்தாழ 900,000 மெட்ரிக் டன் எடைக்கு இணையான விசை இருக்கும்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூலும்&oldid=3759274" இலிருந்து மீள்விக்கப்பட்டது