கூலும் விதி

கூலும் விதி (Coulomb's law, கூலோமின் விதி), அல்லது கூலுமின் நேர்மாற்று இருபடி விதி (Coulomb's inverse-square law) என்பது, மின்னூட்டப்பட்ட மின்மங்களுக்கு இடையிலான நிலைமின் இடைவினைகளை விளக்கும் இயற்பியல் விதியாகும். 1780களில் சார்லசு அகுசிட்டின் டி கூலும் என்பவர், இத்தொடர்பை ஒரு சமன்பாடாக விளக்கினார். கூலும் விதியின்படி,

கூலும் விதி
கூலுமின் டோர்சன் பலன்சு

இரு புள்ளி மின்னூட்டங்களுக்கு இடையேயான மின்னிலை விசையின் எண்ணளவானது, ஒவ்வொரு மின்னூட்டங்களின் எண்ணளவு பெருக்கத் தொகைக்கு நேர்த்தகவிலும், அவற்றுக்கு இடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த் தகவிலும் அமையும்.[1]

திசையிலி வடிவம் தொகு

கூலும் விதியின் திசையிலி வடிவம் மின்னூட்டங்களுக்கு இடையேயான நிலைமின் விசையின் எண்ணளவை மட்டுமே விவரிக்கக் கூடும் . இவற்றின் திசை குறிப்பிட வேண்டுமானால், திசையன் வடிவத்தை பின்பற்ற வேண்டும். கூலும் விதிப்படி, r தொலைவில் உள்ள இரு மின்னூட்டங்களுக்கு ( q1 மற்றும் q2 ) இடையேயான நிலைமின் விசை F இன் எண்ணளவு கீழ் உள்ளவாறு இருக்கும்,[2]

 

இதில் நேர்விசை விரட்டுவதாகவும், எதிர்விசை கவருவதாகவும் இருக்கும். இதன் விகித மாறிலிக்கு Ke கூலும் மாறிலி என்று பெயர் . இது சுற்றுப்பரப்பின் தன்மையோடு தொடர்பு உடையது. இதை கீழ் உள்ளவாறு சரியாக கணக்கிடப்படும்,

 

மின்புலம் தொகு

லாரன்சு விசை விதிப்படி, r தொலைவில் உள்ள ஓர்ப் புள்ளி மின்னூட்டத்தின் (q) மின்புலத்தின் எண்ணளவு (E),

 

திசையன் வடிவம் தொகு

r2 தொலைவில் உள்ள q2 மின்மத்தின் புலத்தை தொடுகிற, r1 தொலைவில் உள்ள q1 மின்ம விசையின் எண்ணளவு மற்றும் திசையை பெறுவதற்கு, திசையன் வடிவம் பின்வருமாறு விவரிக்கப்படும்,

 
கூலும் விதியின் வரைபட குறிகள்

அட்டவணை தொகு

துகள் பண்பு தொடர்பு புலப் பண்பு
திசையன் கணியம்
விசை (2 மூலம் 1இல்)
 
 
மின் புலம் (2 மூலம் 1இல்)
 
தொடர்பு    
திசையிலி கணியம்
நிலை ஆற்றல் (2 மூலம் 1இல்)
 
 
நிலை ஆற்றல் (2 மூலம் 1இல்)
 

மேற்கோள்கள் தொகு

  1. Coulomb (1785a) "Premier mémoire sur l’électricité et le magnétisme," Histoire de l’Académie Royale des Sciences, pages 569-577.
  2. Coulomb's law, Hyperphysics

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூலும்_விதி&oldid=3685984" இலிருந்து மீள்விக்கப்பட்டது