கூழ்ம ஆலை (Colloid mill) என்பது திரவத்தில் உள்ள தொங்கல் கரைசலின் திடப் பொருட்களின் அளவை குறைப்பதற்குப் பயன்படும் ஓர் இயந்திரம் ஆகும், அல்லது ஒரு திரவக் கரைசலில் தொங்கலாக உள்ள மற்றொரு கரைசலுடைய திரவத் துளிகளின் அளவைக் குறைக்கப் பயன்படும் இயந்திரம் என்றும் கூறலாம். கூழ்ம ஆலைகள் சுழலி - நிறுத்தி தத்துவத்தில் இயங்குகின்றன. கூழ்ம ஆலையிலுள்ள சுழலிகள் அதிக வேகத்தில் [1]). ( நிமிடத்திற்கு 2000 முதல் 18000 சுற்றுகள் ) வரை சுழல்கின்றன. இதனால் விளையும் நீரழுத்த வெட்டின் காரணமாக தொங்கலில் உள்ள திடப்பொருள்கள் சீர்குலைகின்றன. தொங்கல்கள் மற்றும் பால்மங்களின் நிலைப்புத் தனமையை அதிகரிக்க கூழ்ம ஆலைகள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும் தொங்கல்களில் உள்ள திடத்துகள்களின் அளவைக் குறைக்கவும் இவை பயன்படுகின்றன. உயர் நீரழுத்த வெட்டு விகிதங்கள் சிறு துளிகளை சுமார் 1 µm அளவிற்கும்[2] கீழே கொண்டு செல்கின்றன. பால்மங்களை பிரித்தெடுத்தலில் இவை அதிகளவில் தடுக்கின்றன.

கூழ்ம ஆலைகள் பின்வரும் தொழில்களில் பயன்படுத்தப்படுகிறது:

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 David B. Troy, ed. (2005). Remington : The science and practice of pharmacy (21st ed. ed.). Philadelphia, PA: Lippincott, Williams & Wilkins. p. 764. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780781746731. பார்க்கப்பட்ட நாள் 23 January 2014. {{cite book}}: |edition= has extra text (help)
  2. 2.0 2.1 McClements, David Julian (1999). Food emulsions : principles, practice, and techniques (2nd ed. ed.). Boca Raton, Fla.: CRC Press. p. 172. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780849380082. {{cite book}}: |edition= has extra text (help)
  3. André O. Barel, Marc Paye, Howard I. Maibach, ed. (2001). Handbook of Cosmetic Science and Technology. Hoboken: Informa Healthcare. p. 663. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780824741396. பார்க்கப்பட்ட நாள் 23 January 2014.{{cite book}}: CS1 maint: multiple names: editors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூழ்ம_ஆலை&oldid=1745559" இலிருந்து மீள்விக்கப்பட்டது