கெர்ரி சாண்ட்லர்

கெர்ரி கமார் சாண்ட்லர் (பிறப்பு செப்டம்பர் 28, 1969) ஒரு அமெரிக்க தட்டிசைப்பாளர் மற்றும் பாடல் பதிவு தயாரிப்பாளர் ஆவார். [1] அவர் மின்னணுசார் இசையில் ஒரு முன்னோடி என்று அழைக்கப்பட்டார். [2]

கெர்ரி சாண்ட்லர்
பிற பெயர்கள்மூன்றாம் தலைமுறை
பிறப்புசெப்டம்பர் 28, 1969 (1969-09-28) (அகவை 54)
பிறப்பிடம்ஈஸ்டு ஆரெஞ்சு, நியூ செர்சி, அமெரிக்கா
தொழில்(கள்)இசை வெளியீட்டாளர்
இசைத்துறையில்1990–தற்போது
வெளியீட்டு நிறுவனங்கள்மேட்ஹவுஸ் ரெக்கர்ல்ஸ் பதிவகம்
இணையதளம்Official website

சுயசரிதை தொகு

ஜாஸ் இசைக்கலைஞர்களின் குடும்பத்தில் சாண்ட்லர் வளர்ந்தார். இவ்சரது பாடல்களில் நியூ ஜெர்சி வகைப் பாடல்களின் தாக்கங்களைக் காணலாம். அவரது தந்தை, ஜோசப் சாண்ட்லர், கெர்ரிக்கு சோல் இசைவகை, மின்னணுசார் இசை வடிவம், திசுகோ வகை இசை என பல் இசை விதங்களைக் கற்றுக்கொடுத்தார். பல நிகழ்ச்சிகளுக்கு தனது தந்தையுடன் சேர்ந்து சாண்ட்லர் செல்லத் தொடங்கினார். அவர் தனது 13 வயதில் நியூ ஜெர்சியின் ஈஸ்ட் ஆரஞ்சில் உள்ள ராலி ராக்கெட் கிளப்பில் தனது இசைப்பதிவுகளை செய்யத் தொடங்கினார்.

14 வயதில், அவர் பாடல் பதிவிடங்களில் பயிற்சி பெருவதோடு மட்டும் அல்லது இசை தயாரிப்பையும் தொடங்கினார். [3] 1991 இல் அட்லாண்டிக் ரெக்கார்ட்ஸில் அவரது முதல் தனிப்பாடலான "சூப்பர் லவர்/கெட் இட் ஆஃப்" வெளியானதிலிருந்து, சாண்ட்லர் நூறுக்கும் மேற்பட்ட பதிவுகளை வெளியிட்டார். [4] அவர் 1980களில் நியூ ஜெர்சியின் நெவார்க்கில் உள்ள கிளப் சான்சிபாரில் தட்டிசப்பாளராக இணந்தார். கிளப் சான்சிபார் என்பது நியூ ஜெர்சி சவுண்ட்டின் டீப் ஹவுஸ் அல்லது கேரேஜ் ஹவுஸின் தாயகம் ஆகும். [5] இதன் மூலம் பல இசைக் கலைஞர்கள் அறிமுகமாயினர்.

சாண்ட்லர் ஐக்கிய இராச்சியத்தில் மேட்ஹவுஸ் ரெக்கார்ஸ் பதிவின் நிறுவனர் ஆவார். அதன் பல பிரபல பாடல் வெளியீட்டளர்களில் ராய் அயர்ஸ் மற்றும் டென்னிஸ் ஃபெரர் ஆகியோர் அடங்குவர்[6].

2016 ஆம் ஆண்டில், அவர் தனது மூன்றாவது பதிவு நிறுவனமான காவோஸ் தியரியை நிறுவினார். இதில் தி மார்டினெஸ் பிரதர்ஸ் மட்டுமல்லாது, ஜேமி ஜோன்ஸ், சடோஷி டோமி, சேத் ட்ரோக்ஸ்லர் போன்ற குறிப்பிடத்தக்க கலைஞர்களின் வெளியீடுகளும் அடங்கும். [7]

பாடல் வெளியீடுகள் தொகு

பதிவுப் பாடல் தொகுப்புகள்

  • ஹெமிஸ்பியர்(1996)
  • கிங் ஸ்ட்ரீட்டில் காஸ் (1997)
  • பர்ஸ்டு ஸ்டெப்ஸ் (1999)
  • கெர்ரியின் ஜாஸ் கஃபே (2000)
  • சாடர்டா (2001)
  • ட்ரையோனிஸ்பியர் (2003)
  • கம்ப்யூட்டர் கேம்ஸ் (2008)
  • ஸ்பேசஸ் அன்ட் ப்ளேசஸ் (2022)

தனிப்பாடல்கள்

  • சூப்பர் லவர் (1990)
  • பானிக் EP (1992)
  • மிஸ்டரி லவ் (1993)
  • வளிமண்டலம் EP தொகுதி. 1 (1993)
  • பார் எ தைம் / சன்ஷைன் & ட்விலைட் (நைட் க்ரூவ்ஸ்) (2005)

குறிப்புகள் தொகு

  1. Birthday post, Chandler Facebook page, September 28, 2016.
  2. . 5 October 2022. {{cite web}}: Missing or empty |title= (help); Missing or empty |url= (help)
  3. "Kerri Chandler – Attack Magazine". 11 July 2012. {{cite web}}: Missing or empty |url= (help)
  4. "Kerri Chandler discography at Discogs". {{cite web}}: Missing or empty |url= (help)
  5. "History of Queer Club Spaces in Newark | Queer Newark". {{cite web}}: Missing or empty |url= (help)
  6. "Kerri Chandler introduces Madhouse sister label, Madtech". Madhouse Records. 11 May 2012.
  7. "Kaoz Theory". {{cite web}}: Missing or empty |url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெர்ரி_சாண்ட்லர்&oldid=3886850" இலிருந்து மீள்விக்கப்பட்டது