கேப்ரியல் ஒகரா

கேப்ரியல் ஒகரா (Gabriel Imomotimi Gbaingbain Okara, 24 eஎப்ரல் 1921 – 25 மார்ச் 2019)[1] என்பவர் நைசீரிய நாட்டைச் சேர்ந்த கவிஞர், புதின ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.[2]

கேப்ரியல் ஒக்காரா
பிறப்பு(1921-04-24)24 ஏப்ரல் 1921
போமவுண்டி, நைஜீரியா
இறப்பு25 மார்ச்சு 2019(2019-03-25) (அகவை 97)
யெனகோவா, நைஜீரியா
பணிபுதின ஆசிரியர், கவிஞர்

நைசீரியாவில் புமுண்டி என்னும் ஊரில் பிறந்த இவர் இளமைக் காலத்தில் புத்தகங்களைப் பைண்டு செய்யும் பணியைச் செய்தார்.[3] பின்னர் வானொலிக்காக நாடகங்களை எழுதினார். இவர் 1964 இல் தி வாய்ஸ் என்னும் புதினத்தை எழுதி வெளியிட்டார். ரிவர் ஸ்டேட் பப்ளிசிங் அவுசு என்னும் நிறுவனத்தில் இயக்குநர் ஆனார். இவருடைய கவிதைகள் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.[4] நைசீரிய இலக்கிய இதழான பிளாக் ஒர்பிசில் ஒகராவின் கவிதைகள் இடம் பெற்றன. தி கால் ஆப் தி ரிவர் நன் என்ற இவர் எழுதிய கவிதைக்காக நைசீரிய கலைத்திருவிழாவில் ஒகராவுக்கு விருது வழங்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. "Renowned Poet and Novelist, Gabriel Okara, Dies Just Before 98th Birthday" பரணிடப்பட்டது 2019-03-25 at the வந்தவழி இயந்திரம், Olisa TV, 25 March 2019.
  2. Laurence, Margaret; Stovel, Nora Foster (2001). Long Drums & Cannons: Nigerian dramatists and novelists, 1952-1966. University of Alberta. pp. 171–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-88864-332-2. பார்க்கப்பட்ட நாள் 8 May 2011.
  3. http://www.britannica.com/biography/Gabriel-Okara
  4. http://www.poetryfoundation.org/poems-and-poets/poets/detail/gabriel-okara
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேப்ரியல்_ஒகரா&oldid=3241629" இலிருந்து மீள்விக்கப்பட்டது