கேரளாவில் மணல் அகழ்வு

இந்தியாவின் கேரளாவில் மணற் கொள்ளை

கேரளாவில் மணல் அகழ்வு (Sand mining in Kerala) இந்தியாவின் கேரள மாநிலத்தில் மணல் அகழ்வு என்பது சுற்றுச்சூழல் கவலைக்குரிய ஒரு தீவிரப் பிரச்சினையாகும். கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டிருந்தாலும், மாநிலத்தின் கட்டுமானப் பணிகளில் மணல் தேவை அதிகமாக இருப்பதால் மணற் கொள்லை இரகசியமாக நடந்து வருகிறது.

பாரதப்புழா ஆற்றில் மணல் அள்ளுவதற்கு சரக்குந்துகள் பயன்படுத்தப்படுகின்றன
பரசினிக்கடவில் மணல் அள்ளுபவர்கள்
சாலக்குடியில் மணல் அகழ்வு

பெரியாறு ஆறு தொகு

கேரளாவில் உள்ள பெரும்பாலான ஆறுகளுக்கு மணல் அகழ்வு ஒரு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. பெரியாறு நதியில் இந்த சிக்கல் அதிகம் காணப்படுகிறது. கண்மூடித்தனமான மணல் அகழ்வு காலடி சிறீ சங்கரா பாலத்தின் உறுதித்தன்மையை கூட பாதித்துள்ளது.

தேசிய புவி அறிவியல் மையத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவின் தலைவர் டி.பத்மலால், இந்த வகையான புத்திசாலித்தனமற்ற மணற்கொள்ளை மாநிலத்தின் நதிகளுக்கு பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது. சட்டவிரோத மணல் அள்ளிய முயற்சியில் காலடியில் பெரியாற்றில் மூழ்கி 4 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவித்துள்ளார். [1]

சட்டம் மற்றும் தடை தொகு

பாலத்தின் ஒரு கிமீ சுற்றளவுக்குள் மணல் சுரங்கம் தோண்டுவதற்கு கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது, ஆனால் பாலத்தின் 500 மீட்டருக்குள் கூட சுரங்கம் தோண்டுவதற்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. சட்டவிரோத மணல் அகழ்வினால் பெரியாறு ஆற்றில் சுமார் 800 பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. ஜூன் 2015 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் கேரள அரசு மூன்று ஆண்டுகளுக்கு கேரளாவின் ஆறு ஆறுகளில் மணல் சுரங்கத்தைத் தடை செய்தது. [2]

இயசீராவின் போராட்டம் தொகு

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள மடாயி கிராமத்தைச் சேர்ந்த பெண் சுற்றுச்சூழல் ஆர்வலர் இயசீரா சமீபத்தில் புதுதில்லியில் உள்ள கேரளா இல்லத்திற்கு முன்பு மணல் அகழ்வுக்கு எதிராக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். [3] இவருடன் அவருடைய மூன்று குழந்தைகளும் வந்திருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு கேரள மாநில அரசுக்கு கடிதம் அனுப்பியதே தவிர அவரது போராட்டம் வெற்றிபெறவில்லை. பிபிசி உட்பட பல்வேறு இந்திய மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் இயசீரா இந்த பிரச்சினைக்கு பரவலான ஒரு பார்வை கிடைத்தது. [4] தலச்சேரியில் உள்ள அரசு பிரென்னன் கல்லூரியின் ஓர் ஆய்வில் வலுவான ஆணாதிக்க இயல்பு காரணமாக கேரள சமூகத்தில் இயசீரா தனிமைப்படுத்தப்பட்டார் என்று கூறப்பட்டுள்ளது. [5]

மேற்கோள்கள் தொகு

  1. Praveen, M. P. (20 April 2014). "Sand mining turning Kerala's rivers into deathtraps". பார்க்கப்பட்ட நாள் 3 January 2019.
  2. "Kerala imposes total ban on sand-mining from six rivers". 12 June 2015. பார்க்கப்பட்ட நாள் 3 January 2019.
  3. NithyaNewsclick, R. (27 November 2013). ""My Sea, My Sand"". பார்க்கப்பட்ட நாள் 3 January 2019.
  4. Nettikkara, Samiha (10 December 2013). "Indian woman fights against sand mining in Kerala village". பார்க்கப்பட்ட நாள் 3 January 2019.
  5. "ജസീറ ഇവിടെയുണ്ട്; നാട് ഭരിക്കുന്ന ആണത്തം തീര്‍ത്ത ഊരുവിലക്കിനകത്ത്". 26 December 2016. பார்க்கப்பட்ட நாள் 3 January 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரளாவில்_மணல்_அகழ்வு&oldid=3852458" இலிருந்து மீள்விக்கப்பட்டது