கே. இராமசுப்பு

கே. இராமசுப்பு என்பவர் திருநெல்வேலி மாவட்ட இந்திய தேசிய காங்கிரசு கட்சியினை சார்ந்த மேனாள் தம

கே. இராமசுப்பு (K. Ramasubbu) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையினை சார்ந்த இவர் மே 30 1911இல் பிறந்தார். பாளையங்கோட்டை தூய சவேரியார் பள்ளியில் பள்ளிக்கல்வியினைக் கற்றார். உயர் கல்வியினை திருநெல்வேலி பேட்டையில் உள்ள மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியிலும், சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியிலும் கற்றார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் நிர்வாகியாகவும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் கடம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு 1957ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பொது வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. (1957). Madras Legislature Who is who 1957. Legislature Department Chennai. .
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._இராமசுப்பு&oldid=3164524" இலிருந்து மீள்விக்கப்பட்டது