கே. என். கோவிந்தாச்சார்யா

இந்திய அரசியல்வாதி

கே. என். கோவிந்தாச்சார்யா (பிறப்பு 1943 மே 2) என்பவர் இந்திய அரசியல்வாதி, இராசுட்டிரிய சேவக் சங்கப் பரப்புநர், சமூகச் செயற்பாட்டாளர், சூழலியல் செயற்பாட்டாளர் எனவும் அறியப்படுகிறார்.

கே. என். கோவிந்தாச்சாரியா
கே. என். கோவிந்தாச்சாரியா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 மே 1943 ( 1943-05-02) (அகவை 81)
திருப்பதி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிசுயேச்சை
பிற அரசியல்
தொடர்புகள்
பாரதிய ஜனதா கட்சி
துணைவர்இல்லை
முன்னாள் கல்லூரிபனாரஸ் இந்து பல்கலைக்கழகம்
வேலைசமூக ஆர்வலர், அரசியல்வாதி, சூழலியல் செயற்பாட்டாளர்

அரசியல் பணிகள் தொகு

1988 ஆம் ஆண்டில் கோவிந்தாச்சார்யா பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அதில் 2000 வரை பொதுச்செயலாளராக இருந்தார். ஆனால் தற்சமயம் பாரதிய சனதா கட்சியின் நடவடிக்கைகளைக் கண்டித்துப் பேசி வருகிறார்.[1]

இவருடைய முன்னெடுப்பு முயற்சியால் பாரத் விகாஸ் சங்கம் என்னும் அமைப்பின் 3 ஆவது தேசிய மாநாடு 2011 திசம்பர் இறுதியில் கல்புர்கியில் நடந்தது.[2]

இந்திய அரசியலிலும் பெரும் குழுமங்களிலும் நடைபெறும் ஊழல்களைக் கண்டித்து சனநாயகக் காப்பு முன்னணி என்னும் ஓர் அமைப்பை 2011 திசம்பர் 25 இல் தொடங்கினார்.

மேற்கோள்கள் தொகு