கே. எம். ரஹ்மத்துல்லா

கே. எம். ரஹ்மத்துல்லா (K. Mohamed Rahamatullah - பிறப்பு 02 ஜூன் 1902 இறப்பு 22 டிசம்பர் 1999), அன்றைய சென்னை மாகாணத்தின், தற்போதைய ஆந்திரப் பிரதேசம்,அனந்தபூரைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதி. சென்னை மாகாணம் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக 3-4-1952 முதல் 2-4-1954 வரை மாநிலங்களவையில் பணியாற்றியுள்ளார்.

பிறப்பும் கல்வியும் தொகு

அன்றைய சென்னை மாகாணத்தின் ஆந்திரப் பிரதேசம்,அனந்தபூரில் 02 ஜூன் 1902 இல் ஹூசைன்பீரான் சாகிப்பிற்க்கு மகனாக மகனாக பிறந்தார். உள்ளூர் பள்ளியில் கல்வி பயின்ற இவர் விவசாயத்தில் அதிக ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார்.

பதவிகள் தொகு

  • அனந்தபூர் முனிசிபல் கவுன்சிலராகவும், சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும், சென்னை சட்டமன்ற கவுன்சில் உறுப்பினராகவும், இருந்தார்.
  • அனந்தபூர் மாவட்ட கல்வி கவுன்சில் தலைவர்
  • பிரித்தானிய இந்தியாவின் மத்தியச் சட்டமன்றம் உறுப்பினர்.
  • மெட்ராஸ் பல்கலைகழக செனட் உறுப்பினர்.
  • ஆந்திர பல்கலைகழக செனட் உறுப்பினர்.
  • 1952-1954 வரை நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.[1]

குடும்பம் தொகு

ரஹ்மத்துல்லா சாகிப்பிற்க்கு ரஹமத்துன்னிசா பேகம் என்ற மனைவியும், மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவருடைய மகன் கே.எம். சைபுல்லா, தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக 1996 - 2002 வரை பணியாற்றினார்.[2]

இறப்பு தொகு

22 டிசம்பர் 1999 அன்று காலமானார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Members of the rajya Sabha [1] மாநிலங்களவை உறுப்பினர்_ வாழ்க்கை வரலாறு_புத்தகம்
  2. [2] குடும்பம்
  3. [3] இறப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எம்._ரஹ்மத்துல்லா&oldid=3943444" இலிருந்து மீள்விக்கப்பட்டது