கே. சுகுமாரனுண்ணி

இந்திய அரசியல்வாதி

கே. சுகுமாரனுண்ணி (K. Sukumaranunni) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த ஒர் ஆசிரியர் ஆவார். சேவை சங்க ஆர்வலர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி என பன்முகங்களுடன் இயங்கினார். 5 ஆவது கேரள சட்டமன்றத்தில் சிறீ கிருட்டிணாபுரம் சட்டமன்ற தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

கே.சுகுமாரனுண்ணி
K. Sukumaranunni
சட்டமன்ற உறுப்பினர், கேரள சட்டமன்றம்
பதவியில்
1977–1979
முன்னையவர்சி. கோவிந்த பணிக்கர்
பின்னவர்கே. சங்கரநாராயணன்
தொகுதிசிறீகிருட்டிணாபுரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1929-04-11)11 ஏப்ரல் 1929
பிரித்தானிய இந்தியா
இறப்பு13 சூலை 1984(1984-07-13) (அகவை 55)
துணைவர்பி.லட்சுமிக்குட்டி
பிள்ளைகள்3

சுயசரிதை தொகு

சின்னம்மாளு வயங்காரம்மாவின் மகனாக 1929 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி கே.சுகுமாரனுண்ணி பிறந்தார். [1] 1984 ஆம் ஆண்டு சூலை மாதம் 13 ஆம் தேதியன்று இறந்தார்.

அரசியல் வாழ்க்கை தொகு

இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக, சுகுமாரனுண்ணி அகில இந்திய காங்கிரசு கட்சி மற்றும் கேரள பிரதேச காங்கிரசு கட்சி ஆகியவற்றில் உறுப்பினராகவும், பாலக்காடு மாவட்ட காங்கிரசு கட்சியின் பொருளாளராகவும் பணியாற்றினார். [1] ஆசிரியராகப் பணிபுரியும் போது, அகில இந்திய கல்விச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொருளாளர், பொதுச் செயலர், கேரள உதவி பெறும் தொடக்க ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர், ஆசிரியர் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் எனப் பல பதவிகளை வகித்துள்ளார். [1]

சுகுமாரனுண்ணி 5 ஆவது கேரள சட்டமன்றத்தில் சிறீகிருட்டிணாபுரம் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். [1]

இலக்கியப் படைப்புகள் தொகு

  • உன்னதி, சிறுகதைகள் (1957) [1]
  • ராசன், சிறுகதைகள் (1959) [1]

மரபு தொகு

ஆசிரியராகவும் பணியாற்றிய இவரை கௌரவிக்கும் வகையில், சுகுமாரனுன்னி கல்வி அறக்கட்டளை சுகுமாரனுண்ணி விருதை ஏற்படுத்தியது. [2] 10,001 இந்திய ரூபாய் ரொக்கப் பரிசு, நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுப் பத்திரம் அடங்கிய இவ்விருது கேரள மாநிலத்தில் சிறந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. [2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Members - Kerala Legislature". www.niyamasabha.org.
  2. 2.0 2.1 "മികച്ച അദ്ധ്യാപകർക്ക് നൽകുന്ന സുകുമാരനുണ്ണി അവാർഡ് എം സലാഹുദ്ദീന്". Sathyam Online. 9 July 2021. https://www.sathyamonline.com/sukumaranunni-award-for-best-teacher-to-m-salahuddin-541339-2/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சுகுமாரனுண்ணி&oldid=3429715" இலிருந்து மீள்விக்கப்பட்டது