கே. ஞானதேசிகன்

கே. ஞானதேசிகன் (K. Gnanadesikan) இந்தியாவின் தமிழ்நாட்டைச் மாநிலத்தை சேர்ந்தவர். 1982-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான இவர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளராக பணியாற்றியவர்.[1][2][3]

கே. ஞானதேசிகன்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர்
பதவியில்
3 டிசம்பர் 2014 – 8 சூன் 2016
முன்னையவர்மோகன் வர்கீஸ் சுங்கத்
பின்னவர்பி. ராமமோகன ராவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஏப்ரல் 16, 1959 (1959-04-16) (அகவை 65)
திருவேங்கடநாதபுரம், திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
கல்விஇ. ஆ. ப
இணையத்தளம்தமிழ்நாடு தலைமை செயலகம்

வாழ்க்கை குறிப்புகள் தொகு

இவர் 1959-ம் ஆண்டு ஏப்ரல் 16 தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருவேங்கடநாதபுரத்தில் பிறந்தார்.இவர் இந்தியா விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.

அரசுப் பணிகள் தொகு

தமிழக நில நிர்வாகத்துறை உதவி ஆட்சியராக 1984-ம் ஆண்டு பணியைத் தொடங்கிய இவர் 1991 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளார்.மின் வாரியத் தலைவராகவும், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மற்றும் நிதித்துறை முதன்மைச் செயலாளர் போன்ற முக்கிய துறைகளில் பணியாற்றியுள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த மோகன் வர்கீஸ் சுங்கத் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் 43-வது தலைமைச் செயலாளராக 3 டிசம்பர் 2014 அன்று பொறுப்பேற்றார்.2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.அவரது பணியிடை நீக்கம் தொடர்பாக அரசு உத்தரவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.எட்டு மாதங்களுக்கு பிறகு சென்னையில் உள்ள அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. புதிய தலைமைச் செயலாளராக கே.ஞானதேசிகன் நியமனம். தி இந்து தமிழ் நாளிதழ். 2 டிசம்பர் 2014. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. T Muruganandham, ed. (3 dec 2014). K Gnanadesikan Appointed New Chief Secretary. New Indian Express. {{cite book}}: Check date values in: |year= (help); Cite has empty unknown parameter: |1= (help)
  3. TN government appoints K. Gnanadesikan as new Chief Secretary. The Hindu Business Line. 25 Nov 2017.
  4. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கே. ஞானதேசிகனுக்கு மீண்டும் பணி. தினமணி நாளிதழ். 9 பிப்ரவரி 2017. {{cite book}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஞானதேசிகன்&oldid=3885492" இலிருந்து மீள்விக்கப்பட்டது