கே. நல்லதம்பி

இந்திய அரசியல்வாதி

கே. நல்லதம்பி (K. Nalla Thambi) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் முன்னாள் தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆனார். இத்தொகுதி பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு என்று ஒதுக்கப்பட்ட தனித்தொகுதியாகும்.[1]

கே. நல்லதம்பி
தமிழ்நாடு, எழும்பூர் சட்ட மன்ற உறுப்பினர்
பதவியில்
2011–2016
முன்னையவர்பரிதி இளம்வழுதி
பின்னவர்கே. எசு. இரவிச்சந்திரன்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதேசிய முற்போக்கு திராவிட கழகம்

2016 இல் இத்தொகுதியில் கே.எசு. ரவிச்சந்திரன் என்பவர் வெற்றிபெற்றார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._நல்லதம்பி&oldid=3943494" இலிருந்து மீள்விக்கப்பட்டது