கே. ராணி

கே. ராணி தென்னிந்தியப் பின்னணிப் பாடகி

கே. ராணி (K. Rani, 1943 - 13 சூலை 2018)[1] தென்னிந்தியப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் 500 இற்கும் அதிகமான பாடல்களை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, வங்காளி, சிங்களம், உசுப்பெக் மொழிகளில் பாடியுள்ளார். ராணி இலங்கையின் "சிறீ லங்கா தாயே" என்ற தேசியப் பண்ணைப் பாடியுள்ளார்.[2]

கே. ராணி
இயற்பெயர்கே.ராணி
பிற பெயர்கள்இன்னிசை ராணி
பிறப்பு1943
இறப்புசூலை 13, 2018
கல்யாண் நகர், ஐதராபாது
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகி
தொழில்(கள்)பாடகி
இசைத்துறையில்1951–1963

இந்திய தேசிய காங்கிரசு தலைவர் காமராசர் இவருக்கு "இன்னிசை ராணி" எனப் பட்டம் சூட்டினார்.[3]

பாடல்கள் தொகு

தமிழ்ப் பாடல்கள் தொகு

பாடல் படம் இணைந்து பாடியோர் பாடலாசிரியர் இசை
கொண்டாட்டம் கொண்டாட்டம் போர்ட்டர் கந்தன் திருச்சி லோகநாதன், எஸ். சி. கிருஷ்ணன்
செல்லமுத்து, மாதவன்
அ. மருதகாசி விஸ்வநாதன்-ராமமூர்த்தி
கண்ணால் நல்லாப் பாரு சாரங்கதரா (1958) பி. பானுமதி, ஏ. பி. கோமளா அ. மருதகாசி ஜி. இராமநாதன்
காந்தம் போலப் பாயும் நல்லகாலம் (1954) உடுமலை நாராயணகவி கே. வி. மகாதேவன்

இசுலாமியப் பாடல்கள் தொகு

நாகூர் ஈ. எம். ஹனீஃபாவுடன் இணைந்து பாடிய சில இசுலாமியப் பாடல்கள்:

  • ஓடுவோம் வாருங்கள்
  • தீனோரே நியாயமா மாறலாமா
  • வாழ வாழ நல்ல வழிகள் உண்டு
  • அருள் மேவும் ஆண்டவனே

மேற்கோள்கள் தொகு

  1. "Veteran female singer K Rani passes away". Times of India. 14-07-2018. https://timesofindia.indiatimes.com/city/hyderabad/veteran-female-singer-k-rani-passes-away/articleshow/64986121.cms. 
  2. "Raja Music Bank". 2011.
  3. இன்னிசை ராணி காலமானார். தினமலர். 14 சூலை 2018.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ராணி&oldid=3241533" இலிருந்து மீள்விக்கப்பட்டது