கொள்ளம்பக்கனார்

கொள்ளம்பக்கனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று இடம்பெற்றுள்ளது. அது நற்றிணை 147 எண் கொண்ட பாடலாக அமைந்துள்ளது.

பாடல் தரும் செய்தி தொகு

கொள் அம்பு அக்கம்(அக்கனார்) என்னும் பொருள் தருமாறு இவரது பெயர் அமைந்துள்ளது. அக்கம் என்பது அம்பறாத்தூணி. அம்பு கொண்ட தூணியை உடையவர். (திணை - குறிஞ்சி) தலைவன் தலைவிக்காகக் காத்திருக்கிறான். தலைவி தினைப்புனம் காக்க வரமுடியாததற்கான காரணத்தைத் தலைவன் கேட்குமாறு தோழி தலைவியிடம் கூறுவது போல் கூறுகிறாள்.

அணிநுதல் குறுமகளே! நீ என்ன ஆவாயோ? - தோழி சொல்கிறாள்.

தினைக் கதிர்களைக் கிளிகள் கவர்ந்து சென்றுவிட்டன. உன்னைத் தினைப்புனம் காக்க அனுப்பிவைத்தேனே! என்ன ஆனாய்? எங்குச் சென்றாய்? - அன்னை அதட்டினாள்.

அவனை நான் அறியேன். கண்டதும் இல்லை. மூங்கிலால் செய்த தட்டையை அடித்துக்கொண்டே பூப் பறிக்கவில்லை. நீராடவும் இல்லை. எனக்கு இந்த நினைவு இல்லை. நான் பொய் சொல்லமாட்டேன். வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசாதே - தலைவி அன்னைக்கு அளித்த விடை.

இதனைக் கேட்ட அன்னைக்குச் சினம் தலைக்குமேல் ஏறிக்கொண்டது.

இனி நீ தினைப்புனம் காக்கச் செல்லவேண்டாம் - அன்னையின் கண்டிப்பு

தோழி நீ அளியை(இரங்கத்தக்கவள்). என்ன செய்வாய்? - தோழியின் சொதப்பல்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொள்ளம்பக்கனார்&oldid=685726" இலிருந்து மீள்விக்கப்பட்டது