கோகியோ

நேபாளாத்திலுள்ள ஒரு கிராமம்

கோகியோ (Gokyo) நேபாள நாட்டின் இமயமலையில் உள்ள சோலுகும்பு மாவட்டத்தில் இருக்கும் கோக்கியோ ரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். தூத் போகாரி என்று அழைக்கப்படும் மூன்றாவது கோகியோ ஏரியின் கிழக்கு கரையில் இக்கிராமம் அமைந்துள்ளது. கோகியோ கடல் மட்டத்திலிருந்து 4,750 மீட்டர் அதாவது 15,584 அடி உயரத்தில் அமைந்துள்ளது.[1] நேபாளம் மற்றும் உலகில் மிக உயர்ந்த உயரத்தில் அமைந்திருக்கும் குடியிருப்புகளில் கோகியோவும் ஒன்றாகும். ஏறக்குறைய இக்கிராமத்திலுள்ள அனைத்து கட்டிடங்களும் மலையேறுபவர்களுக்கு விருந்தினர் மாளிகைகளாகப் பயன்படுகின்றன. இக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் குளிர்காலத்தில் கிராமத்தை விட்டு வெளியேறி நம்சே பசார் போன்ற கீழ்மட்டத்திலுள்ள பிற கிராமங்களுக்குச் செல்கின்றனர். கூகிள் எர்த் இணையதளத்தில் 27°57′16″வடக்கு 86°41′43″கிழக்கு. என்ற அடையாளத்தில் கோகியோ கிராமம் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. கிராமத்திற்கு தென்கிழக்கில் சார்ச்சுங் என்றொரு கிராமம் உள்ளது.

கோகியோ
Gokyo
गोक्यो
கிராமம்
கோகியோவை நோக்கிய பயணம்
கோகியோவை நோக்கிய பயணம்
கோகியோ Gokyo is located in நேபாளம்
கோகியோ Gokyo
கோகியோ
Gokyo
நேபாளத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 27°57′16″N 86°41′43″E / 27.95444°N 86.69528°E / 27.95444; 86.69528
நாடுநேபாளம்
Zoneசாகர்மாதா மண்டலம்
Districtசோலுகும்பு மாவட்டம்
VDCகும்யங்கு
ஏற்றம்
4,750 m (15,580 ft)
நேர வலயம்ஒசநே+5:45 (நேபாள நேரம்)
கோகியோ முதல் மாச்செரமோ வரை செல்லும் மலையேறும் பாதை
கோகியோ மூன்றாவது ஏரியும் கோகியோ ரி யும் உறைந்த நிலையில்

1995 ஆம் ஆண்டில் சம்பவித்த ஒரு பனிச்சரிவில் 17 வெளிநாட்டவர்கள் (13 சப்பானியர்கள், இரண்டு கனடியர்கள், ஒரு ஐரிசு பெண் மற்றும் ஒரு செருமனியர்) உட்பட 42 பேர் கொல்லப்பட்டனர். முந்தைய வாரத்தில் வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட சூறாவளியால் மலைச்சரிவில் 6 அடி அளவுக்கு பனி அதிகாமாக வீசப்பட்டு பனிச்சரிவு அபாயம் கணிசமாக அதிகரித்தது.[2]


மேற்கோள்கள் தொகு

  1. Reynolds, Kev (23 April 2012). Everest: A Trekker's Guide: Trekking Routes in Nepal and Tibet. Cicerone Press Limited. p. 151. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84965-480-7. பார்க்கப்பட்ட நாள் 13 May 2012.
  2. "The Gokyo Avalanche of November 1995". caingram.info. பார்க்கப்பட்ட நாள் 29 April 2014.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகியோ&oldid=3601899" இலிருந்து மீள்விக்கப்பட்டது