கோடம்பாக்கம் மேம்பாலம்

கோடம்பாக்கம் மேம்பாலம் இந்தியாவின் சென்னை நகரில் உள்ள ஒரு சாலை மேம்பாலமாகும். 1965 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது, இது நகரத்தின் பழமையான மேம்பாலங்களில் ஒன்றாகும். இந்த பாலத்தின் நீளம் 623 மீட்டர். [1]

கோடம்பாக்கம் மேம்பாலம்

வரலாறு தொகு

சென்னை நகரத்தின் பரபரப்பான நகரானகோடம்பாக்கத்தில் வண்டித்தடத்தினைக் கடந்து சாலை செல்ல வேண்டியிருந்தது. அதிக போக்குவரத்தால் நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க மேம்பாலம் கட்ட வேண்டும் என 1950 களின் பிற்பகுதியில் மக்களவையில் முதன்முதலில் தெரிவிக்கப்பட்டது. [2] அதன்படி சென்னை மாநில நெடுஞ்சாலைத் துறை 1963 செப்டம்பரில் மேம்பாலம் கட்டுமானத்தினைத் தொடங்கி 1965 செப்டம்பரில் நிறைவு செய்தது.

மேற்கோள்கள் தொகு

  1. "Kodambakkam bridge shut for repairs; motorists fume". The Hindu (Chennai: The Hindu). 18 November 2017. http://www.thehindu.com/news/cities/chennai/kodambakkam-bridge-shut-for-repairs-motorists-fume/article20549299.ece. பார்த்த நாள்: 18 Nov 2017. 
  2. Debates: official report. Government Press, India. 1959. pp. 259–261.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடம்பாக்கம்_மேம்பாலம்&oldid=3460126" இலிருந்து மீள்விக்கப்பட்டது