கோயம்புத்தூர் இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில்

இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோயம்புத்தூர் நகரின் இராஜ வீதியில் அமைந்துள்ள இராமலிங்க சௌடேசுவரி அம்மன் கோயில் ஆகும்.[1] ஐந்து நிலை இராஜகோபுரம் கொண்டு இக்கோயில் அமையப் பெற்றுள்ளது.

கோயம்புத்தூர் இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில்
கோயம்புத்தூர் இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில் is located in தமிழ் நாடு
கோயம்புத்தூர் இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில்
கோயம்புத்தூர் இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில்
இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில், கோயம்புத்தூர், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:10°59′42″N 76°57′37″E / 10.994947°N 76.960229°E / 10.994947; 76.960229
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர்
அமைவிடம்:இராஜ வீதி, கோயம்புத்தூர்
சட்டமன்றத் தொகுதி:கோயம்புத்தூர் வடக்கு
மக்களவைத் தொகுதி:கோயம்புத்தூர்
ஏற்றம்:439.3 m (1,441 அடி)
கோயில் தகவல்
மூலவர்:இராமலிங்கேசுவரர்
தாயார்:சௌடாம்பிகை அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:வைகாசி விசாகம்,
ஐப்பசி பௌர்ணமி
(அன்னாபிசேகம்),
தைப்பூசம்,
மகா சிவராத்திரி,
நவராத்திரி,
விஜயதசமி,
தீபாவளி,
ஆவணி அவிட்டம்,
ஆங்கில வருடப் பிறப்பு,
தமிழ் வருடப் பிறப்பு,
ஆருத்ரா தரிசனம்
உற்சவர் தாயார்:சௌடாம்பிகை அம்மன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

இக்கோயிலானது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 439.3 மீட்டர் (1441 அடி) உயரத்தில், 10°59′42″N 76°57′37″E / 10.994947°N 76.960229°E / 10.994947; 76.960229 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது.

இராமலிங்கேசுவரர், சௌடாம்பிகை அம்மன், விநாயகர், மகாவிஷ்ணுவின் தசாவதாரங்கள், சிவலிங்கம், காயத்ரி தேவி, அஷ்டலட்சுமிகள், மகிசாசுரமர்த்தினி, தத்தாத்ரேயர், நர்த்தன விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், காமதேனு, கற்பக விருட்சம், ஆஞ்சநேயர், அறுபத்து மூன்று நாயன்மார்கள், சனீசுவரர், சப்தமாதாக்கள் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.

வைகாசி விசாகம், ஐப்பசி பௌர்ணமி (அன்னாபிசேகம்), தைப்பூசம், மகா சிவராத்திரி, நவராத்திரி, விஜயதசமி, தீபாவளி, ஆவணி அவிட்டம், ஆங்கில வருடப் பிறப்பு, தமிழ் வருடப் பிறப்பு, ஆருத்ரா தரிசனம் ஆகியவை இக்கோயிலின் முக்கிய திருவிழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. மாலை மலர் (2016-07-07). "ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில் - கோவை". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-10-25.

வெளி இணைப்புகள் தொகு