கோலார் தெப்பதிருவிழா

கோலார் தெப்பத்திருவிழா (Kolar Theppothsava) என்பது ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் கருநாடக மாநிலம் கோலரம்மனை ஏரி நிரம்பி வழியும் போது நடைபெறும் திருவிழாவாகும். கோலார் மாவட்டத்தின் மையப்பகுதியில் கோலரம்மனா கோயிலுக்கு[1] அருகில் கோலரம்மனா கெரே ஏரி உள்ளது. தெப்பத்திருவிழா கருநாடகாவின் அனைத்து நகரங்களிலும் மற்றும் கிராமங்களிலும் உள்ள தெப்பங்களில் நடைபெறுகிறது. பல கிராமங்கள் மற்றும் நகரங்களில் நடைபெறும் பெரிய திருவிழாவாகும். ஏனெனில் இது நல்ல மழை மற்றும் அறுவடைக் காலத்தைக் குறிக்கிறது. மழையினை வழங்கும் கடவுள்களுக்கும் பொதுவாக நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் மிகவும் விலைமதிப்பற்ற தண்ணீரை வைத்திருப்பதற்காக நன்றி தெரிவிக்கும் ஒரு வழியாகும்.

திருவிழா தொகு

இப்பகுதியில் வசிக்கும் அனைத்து சமூகத்தினரும் பங்குபெறும் திருவிழாவாக இது உள்ளது. பொதுவாகப் பல நாட்கள் கொண்டாட்டங்களுடன் நடைபெறும் இத்திருவிழாவின் போது கண்காட்சிகளும் இடம்பெறும். கோலார் தெப்பத்திருவிழாவின் போது நகரின் முதன்மை தெய்வமான கோலர் அம்மனுக்கு பூசை செய்வதோடு திருவிழா தொடங்குகிறது. பின்னர் அம்மன் சிலை நகரில் பவனி செய்யப்படுகிறது. கோலார் நகரம் மற்றும் குருபரப்பேட்டை பெண்கள் சிறிய மிதவைகளைச் செய்து அதன் மீது விளக்கு வைத்து ஏரிக்கு எடுத்துச் செல்கின்றனர். ஏரியில் பூஜை செய்த பிறகு, இந்த மிதவைகள் இரவில் தண்ணீரில் மறைந்துவிடுகின்றன.

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. https://www.karnataka.com/kolar/kolaramma-temple/
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலார்_தெப்பதிருவிழா&oldid=3656319" இலிருந்து மீள்விக்கப்பட்டது