கோவிந்த ஜெய ஜெய

" கோவிந்த ஜெய ஜெய " என்பது ஒரு இந்திய பக்தி மந்திரம் அல்லது பாடல் ஆகும். இது அபய சரணாரவிந்த பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவால் நிறுவப்பட்ட கிருஷ்ண உணர்வு இயக்கத்திலும், மற்றும் பல்வேறு யோகா பள்ளிகளிலும், பொதுவாக இந்துக்களால் அடிக்கடி பாடப்படுகிறது. பிரபுபாதாவின் பக்தர்களான ராதா கிருஷ்ணா கோயில் (லண்டன்) ஜார்ஜ் ஹாரிசன் தயாரித்து 1971 இல் பீட்டில்ஸின் ஆப்பிள் ரெக்கார்ட் லேபிளில் வெளியிடப்பட்ட பாடல்களின் தொகுப்பிற்காக "கோவிந்தா ஜெய் ஜெய் " என்று முழக்கத்தை பதிவு செய்தனர். 1970 இல், இந்த பதிவு முதலில் பக்தர்களின் பக்கமாக, " கோவிந்தா " என்று வெளியிடப்பட்டது.

1996 ஆம் ஆண்டில், ஆங்கில ராக் இசைக்குழுவான குல ஷேகர் "கோவிந்தா ஜெய ஜெய" பாடலைத் தழுவி அவர்களின் வெற்றிப் பாடலான " கோவிந்தா "வைப் பாடினர். இவர்களின் பாடல் முழுவதுமாக சமஸ்கிருதத்தில் பாடப்பட்ட ஒரே பிரித்தானிய வெற்றிப் பாடலாக அமைந்தது. 2016 இல் பேசிய குல ஷேகர் குழுவின் பிரதான பாடகர் அலோன்சா பெவன், "இங்கிலாந்தில் உள்ள ரேடியோ 1 இல் ஒரு பழங்கால இந்தியப் பாடலைப் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று கூறினார். [1]

கலவை தொகு

பாடலின் வரிகள் : கோவிந்த ஜெய ஜெய

கோபால ஜெயஜெய

ராதா ரமண ஹரி

கோவிந்த ஜெயஜெய

நேரடி பொருள்:

கோவிந்தா ( கிருஷ்ணர்) வெற்றி வெற்றி

கோபாலா  (பசுக்களை காப்பவர் கிருஷ்ணர்)

வெற்றி வெற்றி

ராதா ரமணா (ராதையின் காதலன்)

ஹரி (கிருஷ்ணர்/விஷ்ணு)

கோவிந்தா வெற்றி வெற்றி

பாடலின் பதிவுகள் பிரபுபாதா அவர்களாலும், விஷ்ணுஜன ஸ்வாமி, ஜெய் உத்தல், மகி அசகாவா, ஆலிஸ் கோல்ட்ரேன் மற்றும் டோனா டி லோரி ஆகியோராலும் செய்யப்பட்டுள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. "Kula Shaker 20th Anniversary of K". alberthallmanchester.com. பார்க்கப்பட்ட நாள் 7 March 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவிந்த_ஜெய_ஜெய&oldid=3847114" இலிருந்து மீள்விக்கப்பட்டது