கோவை - 43 (துணை - 1)

கோ - 43 (துணை - 1) (CO 43 (Sub -1)) என்பது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நெல் இனப் பெருக்க நிலையம் மூலம் 1982 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கோவை - 43 நெல் இரகத்தில் இருந்து மேம்படுத்தப்பட்ட துணை இரகமாகும். இந்த இரகத்தை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தாவர மூலக்கூறுவியல் ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது. இந்தப் புதிய இரகம் புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தில் அகில இந்திய அளவில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, 50 முதல் 100 இடங்களில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 26 பகுதிகளில் சோதனை முறையில் சாகுபடி செய்து பார்த்ததில், மற்ற நெல் ரகங்களைக் காட்டிலும் இந்த ரகம் 25 முதல் 30 சதவீதம் கூடுதல் மகசூல் கொடுத்தது தெரியவந்தது.

கோ - 43 (துணை - 1)
CO 43 (Sub -1)
பேரினம்ஒரய்சா சாட்டிவா
கலப்பினப் பெற்றோர்கோ-43
பயிரிடும்வகைTNAU, கோவை
தோற்றம்கோவை, தமிழ் நாடு,  இந்தியா

சிறப்பம்சங்கள் தொகு

இந்தத் துணை நெல் இரகமானது கோ-43வின் அனைத்து மரபியல் கூறுகளையும் உள்ளடக்கியுள்ளது. மேலும் இது கடலோர மாவட்டங்களிலும் வடிநிலப்பகுதிகளில் ஏற்படும் அதிக மழை வெள்ளத்தைத் தாங்கி வளரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.[1]

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள் தொகு

  1. த.சத்தியசீலன் (22 செப்டம்பர் 2018). "மழை வெள்ளம் தாங்கும் புதிய நெல் ரகம்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 28 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவை_-_43_(துணை_-_1)&oldid=3929453" இலிருந்து மீள்விக்கப்பட்டது