கௌதமிபுத்ர சதகர்ணி

கௌதமிபுத்ர சதகர்ணி (Gautamiputra Satakarni, கி.பி. 78-102) சாதவாகனர் ராஜவம்சத்தில் 23ஆம் அரசராக திகழ்ந்தார். சதவாகனர்களில் மிகப்பெரும் மன்னராக இருந்த கௌதமிபுத்ரன் தன் தந்தை சதகர்ணிக்கு பின் அரசன் ஆனார்.[1]

வரலாறு தொகு

கௌதமிபுத்திர சதகர்ணி தன் பேரரசை பெரிதளவில் விரிவடைய வைத்து இரு அஸ்வமேத யாகங்களை நடத்தியவர். இவரது ஆட்சிக் காலத்தில் சகர்கள், கிரேக்கர்கள், மற்றும் பகலவர்கள் சாதவாகனப் பேரரசின் மீது படையெடுப்புகளை முறியடித்து சாதவாகனப் பேரரசை விரிவு படுத்தினார்.

 
கௌதமிபுத்திர சதகர்ணியின் நாணயம்

கௌதமிபுத்திர சதகர்ணியின் ஆட்சிப் பகுதியில் தக்கான பீடபூமி, சௌராஷ்டிரம், அவந்தி, இருந்ததாக நாசிக் கற்சிற்பங்கள் எடுத்துரைக்கிறது. மேலும் தென்னிந்தியாவின் காஞ்சியையும் வென்றுள்ளார்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Rise of the Satavahana: Gautamiputra Satakarni
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌதமிபுத்ர_சதகர்ணி&oldid=3128635" இலிருந்து மீள்விக்கப்பட்டது