கௌரி விசுவநாதன்

இந்திய-அமெரிக்க கல்வியாளர்

கௌரி விசுவநாதன் (Gauri Viswanathan) ஓர் இந்திய அமெரிக்க கல்வியாளராவார். 1933 ஆம் ஆண்டு மனிதநேயப் பேராசிரியராகவும், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தெற்காசியா நிறுவனத்தின் இயக்குநராகவும் இருந்தார். [1]

கௌரி விசுவநாதன்
Gauri Viswanathan
விருதுகள்இயேம்சு ரசல் லோவெல் பரிசு (1998)
குக்கனெய்ம் உறுப்பினர் (1990)
கல்விப் பின்னணி
கல்வி
கல்விப் பணி
துறைஆங்கில இலக்கியம்
கல்வி நிலையங்கள்

சுயசரிதை தொகு

கௌரி விசுவநாதன் 1950 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதியன்று கொல்கத்தாவில் ஐ.நா அதிகாரிகளுக்கு மகளாகப் பிறந்தார். [2] தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களையும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். [1] [2] பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரித்தானிய மற்றும் காலனித்துவ கலாச்சார ஆய்வுகளில் இவரது ஆராய்ச்சி கவனம் செலுத்துகிறது. [2]

1989 ஆம் ஆண்டில் வெற்றியின் முகமூடிகள் என்ற தலைப்பில் இவர் இந்தியாவில் பிரித்தானிய ஆட்சி மற்றும் இலக்கிய ஆய்வு என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதினார். இது நவீன மொழி சங்கத்தின் இயேம்சு ரசல் லோவெல் பரிசை வென்றது, [3] 1998 ஆம் ஆண்டில் இவர் எழுதிய மடிப்புக்கு வெளியே என்ற தலைப்பிலான மதமாற்றம், நவீனத்துவம் மற்றும் நம்பிக்கை குறித்த நூல் அமெரிக்க ஒப்பீட்டு இலக்கிய சங்கம் வழங்கிய ஆரி லெவின் பரிசை வென்றது. [2] கௌரி 1990 ஆம் ஆண்டில் குக்கனெய்ம் உறுப்பினர் தகுதியையும் 1986 ஆம் ஆண்டில் மெலன் அறக்கட்டளை உறுப்பினர் தகுதியையும் பெற்றார். [4] .

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Gauri Viswanathan | The Department of English and Comparative Literature". english.columbia.edu. பார்க்கப்பட்ட நாள் 2022-06-13.
  2. 2.0 2.1 2.2 2.3 "Rediff On The NeT: Columbia Professor Wins Major Prize". www.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2022-06-13.
  3. "James Russell Lowell Prize Winners". Modern Language Association (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-14.
  4. "Gauri Viswanathan". John Simon Guggenheim Memorial Foundation (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌரி_விசுவநாதன்&oldid=3448586" இலிருந்து மீள்விக்கப்பட்டது