க. கார்த்திகேயன்

க. கார்த்திகேயன் (பிறப்பு சூன் 13, 1954) மலேசிய மூத்த எழுத்தாளரும், தமிழ் நாடகக் கலைஞர்களுள் ஒருவரும் பத்திரிகையாளருமாவார். எழுத்துறையில் இவர் கரு.கார்த்திக், ஊசிமிளகாய், காவன்னா ஆகிய புனைப் பெயர்களில் அறிமுகமாகியுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு தொகு

1981 முதல் எழுதிவரும் இவர் மலேசியத் தமிழ்க் கலையுலகம் தொடர்பாக பல கட்டுரைகளையும், தொடர் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். மலேசியாவில் தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. மேலும், சில இதழ்களில் சினிமா பற்றிய கேள்வி-பதில் பகுதியைப் பொறுப்பேற்று நடத்தியுள்ளார்.

இதழியல் தொகு

"தினமுரசு" பத்திரிகையின் ஞாயிறு பதிப்பு ஆசிரியராகவும் சிறிது காலம் இவர் பணியாற்றியுள்ளார்.

நடிப்புத்துறை தொகு

நடிப்புத்துறையில் இயல்பாகவே ஆர்வம் கொண்டுள்ள இவர் பல வானொலி நாடகங்களிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துள்ளார். திரைப்படத்துறையில் துணை இயக்குநராகவும், திரைக்கதை வசனம் எழுதுபவராகவும் பணி புரிந்துள்ளார்.

கண்ணதாசன் நினைவு நாள் தொகு

கவிஞர் கண்ணதாசனின் தீவிர அபிமானியான இவர் கடந்த பல ஆண்டுகளாக கண்ணதாசனின் நினைவு நாளை மலேசியாவின் தலை நகர் கோலாலம்பூரில் மிகச் சிறப்பான விழாவாக ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றார்.

நூல்கள் தொகு

இவரால் இதுவரை ஒரு கட்டுரை நூல் எழுதி வெளியிடப்பட்டுள்ளது.

  • "என் பார்வையில் பாடலாசிரியர்கள்"

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._கார்த்திகேயன்&oldid=3237515" இலிருந்து மீள்விக்கப்பட்டது