க. வேல்சாமி

க. வேல்சாமி (K. Velsamy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்தவர். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற 1996 தேர்தலில் நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தொகுதி பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட தாகும். வேல்சாமி திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] எதிர்த்து போட்டியிட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அன்பழகன் 38795 வாக்குகள் பெற்றார்.

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1996 நாமக்கல் திமுக 76,860 62.15[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 7. Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
  2. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._வேல்சாமி&oldid=3943370" இலிருந்து மீள்விக்கப்பட்டது