சகானா தேவி என்பவர் ( வங்காள மொழி: সাহানা দেবী ) (1897-1990) [1] ஓர் இந்தியப் பாடகியாவார், ரவீந்திர சங்கீதத்தின் [2] பாடல்களைக் கேட்டே பாடகியாக உத்வேகம் கிடைக்கப்பெற்ற இவர் புகழ்பெற்ற வங்காளச் சுதந்திரப் போராட்ட வீரரான தேசபந்து சித்தரஞ்சன் தாசின் மருமகளாவார். [3]

குடும்பப்பின்னணி தொகு

புகழ்பெற்ற பெங்காலி பிராமணக் குடும்பத்தில் பிறந்தவரான இவரது தாய் மற்றும் தந்தை வழிகளில் வந்த ஆண்களும் பெண்களும் என ஒவ்வொருவருமே அவரவர் பாதைகளில் புகழ்பெற்றவர்களாவர்.

  • இவரது தந்தைவழி தாத்தாவான காளி நாராயண் குப்தா ஒரு ஜமீன்தார் மட்டுமல்ல பிரம்ம சமாஜ தலைவரும் சமூக சீர்திருத்தவாதியும் பாடலாசிரியருமாவார்.
  • இந்திய ஐசிஎஸ் தரவரிசையில் ஒருவரான கேஜி குப்தா, இவரது தந்தையின் மூத்த சகோதரர் ஆவார்.
  • இவரது தந்தையான மருத்துவர். பியாரே மோகன் குப்தா மாவட்ட சிவில் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர்
  • அதுல் பிரசாத் சென் இவரது தந்தையின் சகோதரியின் மகன். [4]
  • இவரது தாயார் தாரளா தேவி, 'தேசபந்து' சித்தரஞ்சன் தாஸின் மூத்த சகோதரி ஆவார்.
  • சகானாவின் தாய்வழி அத்தையான அமலா தாஸ், கல்வியாளர், ரவீந்திர சங்கீத்தின் முன்னோடி விரிவுரையாளர் மற்றும் எச்எம்வியில்(HMV) பாடல்களைப் பதிவு செய்த முதல் இந்தியப் பெண் ஆவார்.

தொழில் தொகு

ரவீந்திரநாத் தாகூர் மற்றும் தினேந்திரநாத் தாகூர் ஆகியோரிடமிருந்து நேரடியாக இசைப் பாடங்களைக் கற்றுக்கொண்ட சில பாடகர்களில் இவரும் ஒருவராவார். ரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதனில் மாணவியாக இருந்து ரவீந்திரநாத் தாகூரின் அழகான அர்த்தமுள்ள பாடல்களைத் தன் இனிய குரலால் பாடி அதற்கு வளம் சேர்த்துள்ள சகானா, 1922 ஆம் ஆண்டில், இந்தியத் தேசிய காங்கிரஸின் கயா அமர்வில் மற்றொரு பிரபலப் பாடகரான திலிப்குமார் ராயை சந்தித்து, அதன் மூலம் இருவரும் இணைந்து வாழ்ந்தனர். இருவரும் அவரவருக்கென தனித்துவமான இசைவழியைத் தக்க வைத்துக் கொண்டாலும், சகானாவின் இசைப்பாணி ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்துள்ளது.


"வங்காளத்தின் நைட்டிங்கேல்" என்ற பட்டத்தைக் கொண்டுள்ள இவர் தனது துணைவரான திலிப்குமார் ராயுடன் இணைந்து நவம்பர் 22, 1928 அன்று பாண்டிச்சேரியிலுள்ள அன்னை அரவிந்தர் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தனர். அந்த ஆசிரமத்தில், நடனக் கலைஞராகவும் கவிஞராகவும் அவருடைய திறன்கள் முழுமையாக வளர்ந்ததோடு அங்கே அரவிந்தருக்காகவும், அன்னை சாரதாவுக்காகவும் பல்வேறு பாடல்களையும் கீர்த்தனைகளையும் இயற்றிப் பாடியுள்ளார்.[5]


சகானா சாந்திநிகேதனிலிருந்து வெளியேறி ஆசிரமத்திற்குச் சென்றபோது தாகூர் மிகவும் வருத்தப்பட்டு இவருக்கு அனுப்பிய கடிதத்தில் "நான் ஒரு பேரரசராக இருந்திருந்தால், முகலாயப் பேரரசர்களைப் போல, உன்னை ஆசிரமத்திலிருந்து திரும்ப அழைத்து வர என் படையை அனுப்பியிருப்பேன்."   என்று எழுதியுள்ளதிலிருந்து இவரின் பாடல் திறமையை தாகூர் எந்தளவிற்கு மதித்துள்ளார் என்பதை அறியலாம், மேலும் ரவீந்திரநாத் தாகூர் தனது பாடல்களை மேம்படுத்த அனுமதித்த இரண்டு பாடகிகளில் சகானா தேவியும் ஒருவர்.[6]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

1928 ஆம் ஆண்டில், பாண்டிச்சேரியில் உள்ள அரவிந்தரின் ஆசிரமத்தில் சேர்ந்த இவர் 1990 ஆம் ஆண்டில் இறக்கும் வரை அங்கேயே வாழ்ந்துள்ளார். [7]

1978 ஆம் ஆண்டில் 'ஸ்மிருதிர் கேயா' (நினைவக ஓட்டத்தில் பயணம் செய்தல்) [8] என்ற தன் சுயசரிதையை எழுதியுள்ளார் சகான.

மேற்கோள்கள் தொகு

  1. "Sahana Devi | Sri Chinmoy". பார்க்கப்பட்ட நாள் 14 June 2011.
  2. "Hemanta - The Early Years". பார்க்கப்பட்ட நாள் 14 June 2011.
  3. "Sahana Devi - Forty Years Ago". பார்க்கப்பட்ட நாள் 24 February 2012.
  4. Sayeed. Banglapedia: National Encyclopedia of Bangladesh. Asiatic Society of Bangladesh. 
  5. "ஸ்ரீ அரவிந்தருக்காக சகானா பாடுகிறார்".
  6. Ashis K. Biswas (28 Jan 2002). "Copy Write, Unbound". Outlook India. பார்க்கப்பட்ட நாள் 14 June 2011.
  7. "Sahana Devi - Forty Years Ago". Sri Aurobindo Ashram Trust. பார்க்கப்பட்ட நாள் 14 June 2011."Sahana Devi - Forty Years Ago". Sri Aurobindo Ashram Trust. Retrieved 14 June 2011.
  8. Alice Thorner; Maithreyi Krishnaraj (2000). Ideals, Images, and Real Lives: Women in Literature and History. Orient Blackswan. பக். 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-250-0843-9. https://books.google.com/books?id=LO-ztHz3XTUC&pg=PA66. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகானா_தேவி&oldid=3940000" இலிருந்து மீள்விக்கப்பட்டது