சக்கலின் மீதான மங்கோலியப் படையெடுப்புகள்

சக்கலின் மீதான மங்கோலியப் படையெடுப்புகள் என்பது 1264 முதல் 1308 வரை மங்கோலியப் பேரரசு மற்றும் அதன் பின் வந்த யுவான் அரசமரபு ஆகியவை சக்கலின் தீவு மீது பல ஊடுருவல்களை நடத்தியதைக் குறிப்பதாகும். சக்கலின் தீவு சைபீரியாவின் கிழக்குக் கடற்கரையைத் தாண்டி அமைந்துள்ளது. இப்படையெடுப்புகளை ஹொக்கைடோ தீவில் இருந்து வடக்கு நோக்கி விரிவடைந்து கொண்டிருந்த ஐனுக்களுக்கு எதிராகத் தங்களது நிவ்கு கூட்டாளிகளுக்கு உதவுவதற்காக மங்கோலியர்கள் நடத்தினர். இதில் ஐனுக்கள் கடுமையான எதிர்ப்பைக் காட்டினர். 1297ஆம் ஆண்டு தார்தரி நீரிணைப்பைத் தாண்டி கண்டப் பகுதியில் இருந்த மங்கோலியக் காவலிடங்கள் மீது ஒரு பதில் தாக்குதலைக் கூட தொடங்கினர். ஆனால் 1308ஆம் ஆண்டு சீனாவின் மங்கோலியர்கள் தலைமையிலான யுவான் அரச மரபிடம் இறுதியாகப் பணிந்தனர்.

ஐனு மக்களின் வராலாற்று ரீதியான விரிவாக்கம்
வில் அம்புடன் ஐனு வீரன். சீனப் பதிவுகளில், ஐனுக்கள் மர விற்களையும் விடம் தடவிய அம்புகளையும் பயன்படுத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]

மேலும் காண்க தொகு

உசாத்துணை தொகு

குறிப்புகள் தொகு

மேற்கோள் நூல்கள் தொகு

மேலும் படிக்க தொகு