சங்கிலி என்பது, பலவளையங்களை ஒன்றுடன் ஒன்று தொடர்ச்சியாகக் கொழுவி இணைத்து உருவாக்கப்படுவது ஆகும். சங்கிலிகள் பொதுவாக உலோக வளையங்களினால் ஆக்கப்படுகின்றன. சங்கிலிகள் கயிறுகளைப்போல் எல்லாப் பக்கங்களிலும் நெகிழ்ந்து கொடுக்கக்கூடியனவாதலால், கயிறுகள் பயன்படக்கூடிய பல இடங்களில் சங்கிலிகள் பயன்படுகின்றன. சங்கிலிகள் பல்வேறு அளவுகளில் செய்யப்படுவதுடன் அவற்றின் பயன்பாடுகளும் பல்வகைப்படுகின்றன. கைத்தொழில் துறையில் கடினமான பல வேலைகளுக்கும் பயன்படுவது முதல், அணிகலன்களாக மனிதருடைய கழுத்துக்கும் கைகளுக்கும் அழகூட்டுவது வரை பல இடங்களிலும் சங்கிலிகள் பயன்படுகின்றன. பொதுவாகப் பெரிய சங்கிலிகள் இரும்பினால் செய்யப்படுகின்றன. இவை பாரமான பொருட்களைக் கட்டி உயர்த்துவது, கட்டி இழுப்பது போன்ற வலு தேவைப்படும் இடங்களில் பயன்படுகிறது. அணிகலன்களாகப் பயன்படுபவை சிறிய சங்கிலிகள் ஆகும். இவை பெரும்பாலும் பிளாட்டினம், பொன், வெள்ளி முதலிய விலை உயர்ந்த உலோகங்களினால் செய்யப்படுகின்றன.

வளையங்களினாலான ஒரு சங்கிலி
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கிலி&oldid=1196413" இலிருந்து மீள்விக்கப்பட்டது