சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்)

சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்) என்னும் நூல் சு. வையாபுரிப்பிள்ளை தொகுத்த நூல்களில் ஒன்று. [1] இந்தப் பதிப்பில் பாடலாசிரியரின் பாடல்கள் வெவ்வேறு நூல்களில் காணப்படினும் அனைத்தும் ஒருங்கிணைத்துத் தொகுக்கப்பட்டுள்ளன. சில புலவர்களின் பெயர்கள் வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன. இவற்றை அறிஞர் கழகம் ஆய்ந்து கண்டு ஒருவரே என்று முடிவு செய்துள்ளது. [2] புலவர் பெயர்கள் அகர வரிசையில் அடுக்கப்பட்டுள்ளன.

பாடல்கள் தொகு

  • ஆசிரியர் பெயர் காணாப் பாடல்கள் 132 2250-2381
  • பாடிய புலவர்கள் 473
  • இவர்கள் பாடிய பாடல்கள் 2279

பதிப்பில் காணப்படும் தலைப்புகள் தொகு

  • உரிமையுரை – ஆசிரியப்பா வடிவில்
  • எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் அடங்கியுள்ள நூல்களை தொகுத்துக் கூறும் நினைவு வெண்பாக்கள்
  • நன்றியுரை – க. அ. செல்லப்பன்
  • முகவுரை – மு. சண்முகம்
  • முதற்பதிப்பின் முகவுரை – மு. பாலசுப்பிரமணியன்
  • கடவுள் வாழ்த்து [3]
  • நூல் [4]
  • ஆசிரியர் பெயர் காணப்படுவன [5]
  • ஆசிரியர் பெயர் காணாதன [6]
  • பிரதிகளில் அகப்படாத பாட்டுகளின் எண்கள் [7]
  • சங்க இலக்கியங்களின் வரலாறு முதலியன [8]
  • சங்க இலக்கியங்களின் பதிப்பு விவரம் [9]
  • சிறப்புப் பெயர் அகராதி [10]
  • புலவர்களும் பாடற்றொகையும் [11]
  • பாட்டெண்களின் ஒப்புநோக்க அட்டவணை [12]
  • புலர்களின் பெயர் வகை [13]
  • புலவர்களும் அவர்களாற் பாடப்பட்டோரும் [14]
  • அரசர் முதலானோரும் அவர்களைப் பாடினோரும் [15]
  • புலவர்கள் அகராதி [16]
  • பாட்டு முதற்குறிப்பு அகராதி [17]
  • பிரதிகளின் அட்டவணை [18]

அடிக்குறிப்பு தொகு

  1. சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்) வையாபுரிப் பிள்ளை தொகுப்பும் பத்திப்பும், அறிஞர் கழகம் ஆய்ந்து வழங்கிய அரிய பதிப்பு, சென்னை, பாரி நிலையம் வெளியீடு, முதற் பதிப்பு 1940, இரண்டாம் பதிப்பு 1967.
  2. நூலின் முகவுரை
  3. பக்கம் 1-7
  4. பக்கம் 8-1368
  5. பக்கம் 8-1320
  6. பக்கம் 1321-1368
  7. பக்கம் 1369
  8. பக்கம் 1370-1373
  9. பக்கம் 1374-1377
  10. பக்கம் 1378-1402
  11. பக்கம் 1403-1405
  12. பக்கம் 1406-1421
  13. பக்கம் 1422-1435
  14. பக்கம் 1436-1460
  15. பக்கம் 1461-1485
  16. பக்கம் 1486-1502
  17. பக்கம் 1503-1534
  18. பக்கம் 1535-1540