சஞ்சய் யாதவ்

துடுப்பாட்ட வீரர்

ராம்சிங் சஞ்சய் யாதவ் (Ramsingh Sanjay Yadav, பிறப்பு: மே 10, 1995)[1] என்பவர் தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டத்தின், ஒசூரைச் சேர்ந்த ஒரு துடுப்பாட்ட வீரராவார். இவர் ஐபிஎல் போட்டிக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ரூ 10 இலட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

வாழ்க்கை தொகு

சஞ்சய் யாதவின் தந்தை ராம்சிங் யாதவ், தாயார் மாயாதேவி ஆகியோர் உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் இருந்து 2000 ஆண்டுகளின் துவக்கத்தில் பிழைப்பு தேடி ஓசூர் பகுதிக்கு வந்தவர்களாவர். ராம்சிங் யாதவ் ஓசூரில் வண்ணம் பூசுபவராகப் பணியாற்றி வருகிறார். இவர்கள் ஓசூர் காமராஜ் குடியிருப்பில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். சஞ்சய் யாதவ் சிறுவயதிலிருந்தே துடுப்பாட்டத்தில் ஆர்வம் உடையவர். சஞ்சய் யாதவ் சென்னை லயோலா கல்லூரியில் புள்ளியியல் இளம் அறிவியல் பாடத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

துடுப்பாட்டம் தொகு

சஞ்சய் யாதவ் இடது கை துடுப்பாட்ட வீரராகவும், இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் உள்ளார். 2017 ஆண்டு நடந்த தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் திருவள்ளூர் வீரன்ஸ் அணிக்காக பங்கேற்றார். இதில், திருவள்ளூர் வீரன்ஸ் அணியில் இடம் பெற்று திண்டுக்கல் அணிக்கு எதிராக சிறப்பான ஆடினார். 2017 ஆண்டு துவக்கத்தில் தமிழ்நாடு 20-20 அணிக்காக விளையாடிய போது கேரள அணிக்கு எதிராக, முக்கியமான கட்டத்தில் சிறப்பாக ஆடி தனது அணியை வெற்றி பெறச் செய்தார்.[2] இதன் மூலம் சஞ்சய் யாதவுக்கு ஐ.பி.எல். வாய்ப்பு கிடைத்துள்ளது. 2017 ஆண்டு பெங்களூருவில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் இறுதி கட்டமாக 351 வீரர்கள் பங்கேற்றனர். இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 10 லட்சம் ரூபாய்க்கு சஞ்சய் யாதவ் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Sanjay Yadav". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3-03-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "ஐபிஎல் போட்டிக்காக ஓசூர் வீரர் கொல்கத்தா அணிக்கு தேர்வு". செய்தி. http://tamil.eenaduindia.com. Archived from the original on 2017-04-19. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)
  3. கார்த்திக் கிருஷ்ணா (20 பெப்ரவரி 2017). "ஐபிஎல் ஏலம் 2017: இந்திய பந்துவீச்சாளர்களுக்கு அதிக மவுசு". செய்தி. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சய்_யாதவ்&oldid=3929510" இலிருந்து மீள்விக்கப்பட்டது