சதகத் ஆசிரமம்

சதகத் ஆசிரமம் (Sadaqat Ashram) என்பது பீகார் மாநிலம் பாட்னாவில் விமான நிலையத்திலிருந்து ஏறக்குறைய ஏழு கிலோமீட்டர் தொலைவில் கங்கை நதிக்கரையில், திகா பகுதியின் பிரதான சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான இராஜேந்திர பிரசாத்தின் இல்லங்களில் இதுவும் ஒன்றாகும். இவர் ஓய்வு பெற்ற பிறகு இங்கேயே வாழ்ந்து, தனது வாழ்க்கையின் கடைசி நாட்களைக் கழித்தார்.[1]

இது 1921-ல் மௌலானா மசுகருல் கக் என்பவரால் நிறுவப்பட்டது. சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும்,[2] ஆசிரமத்தின் நிலத்தை, இவரது நெருங்கிய கூட்டாளியான மௌலானா மசுருல் கக்கின் நண்பர் கைருன் மியான் தேசிய இயக்கத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.[3] சுதந்திரப் போராட்டத்தின் போது பிரஜ்கிஷோர் பிரசாத், மௌலானா மசுருல் கஹக், அனுக்ரக் நாராயண் சின்கா மற்றும் இராஜேந்திர பிரசாத் போன்ற புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இடையே முக்கியமான சந்திப்புகள் இங்கு நடந்தன. சுதந்திரத்திற்குப் பிறகு, ஜெயபிரகாஷ் நாராயண் தனது வரலாற்று இயக்கத்தை 1970களில் சதகாத் ஆசிரமத்திலிருந்து தொடங்கினார்.[4][5]

தற்பொழுது தொகு

தேசிய பல்கலைக்கழகமான பீகார் வித்யாபீடத்தின் தலைமையகம்,[2] ஆசிரமத்தில் இப்போது இராஜேந்திர சுமிருதி சங்க்ரகாலயா என்ற அருங்காட்சியகம் உள்ளது. இதில் இராஜேந்திர பிரசாத்தின் தனிப்பட்ட உடைமைகள் மற்றும் இந்திய விடுதலை தொடர்பான பல வரலாற்று விடயங்கள் கண்காட்சியில் உள்ளன. இது ஒவ்வொரு ஆண்டும் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.[6]

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "This day that age". The Hindu. 2012-05-16. பார்க்கப்பட்ட நாள் 2014-04-30.
  2. 2.0 2.1 "Adobe of Indian freedom fighters at sale : HERITAGE - India Today". Indiatoday.intoday.in. 2007-07-16. பார்க்கப்பட்ட நாள் 2014-04-30.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-09. பார்க்கப்பட்ட நாள் 2023-01-14.
  4. "Patna's historic Ashram in danger - IBNLive". Ibnlive.in.com. 2007-06-20. Archived from the original on 2014-05-03. பார்க்கப்பட்ட நாள் 2014-04-30.
  5. Meandering Pastures of Memories - Shovana Narayan - Google Books. https://books.google.com/books?id=bYBdK0algM8C&q=sadaqat+ashram+on+the+banks+of+ganga&pg=PA133. பார்த்த நாள்: 2014-04-30. 
  6. "Sadaqat Ashram". Mapsofindia.com. 2013-05-29. பார்க்கப்பட்ட நாள் 2014-04-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதகத்_ஆசிரமம்&oldid=3641483" இலிருந்து மீள்விக்கப்பட்டது