சதர்ன் மருத்துவப் பல்கலைக்கழகம்

சதர்ன் மருத்துவப் பல்கலைக்கழகம் (Southern Medical University, எளிய சீனம்: 南方医科大学; மரபுவழிச் சீனம்: 南方醫科大學) தென் மத்திய சீனத்தில் பவள நதிக்கரையோரம் ஆங்கொங்கிலிருந்து 120 கி.மீ. (75 மைல்) தொலைவில் அமைந்துள்ள, குவாங்டாங் மாநிலத்தின் தலைநகரான குவாங்சௌ நகரத்தில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகம் முன்னர் முதல் இராணுவ மருத்துவப் பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்டிருந்தது. 1951 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் 1978 ஆம் ஆண்டு முதல் சீனாவின் முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சீனாவின் மைய இராணுவ ஆணையத்தின் கீழ் இயங்கிவந்த இந்த முதல் இராணுவ மருத்துவப் பல்கலைக்கழகம், ஆகத்து 2004 ஆம் ஆண்டு குவாங்டாங் மாகாணத்தின் அதிகாரத்தின் கீழ் வந்த பிறகு சதர்ன் மருத்துவப் பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றப்பட்டது[1]. குவாங்சௌவிலுள்ள வெண் மேக மலை என்றழைக்கப்படும் பையுன் மலையின்[2] அடிவாரத்தில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

சதர்ன் மருத்துவப் பல்கலைக்கழகம்
南方医科大学
முந்தைய பெயர்கள்
முதல் இராணுவ மருத்துவப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்1951
அமைவிடம்
குவாங்சௌ
,
குவாங்சௌ (முதன்மை வளாகம்), பொசன் (சுண்டே வளாகம்)
, ,
510515
,
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்www.fimmu.com
நிருவாக கட்டிடம்
சதர்ன் மருத்துவப் பல்கலைக்கழக நூலகம்

மேற்கோள்கள் தொகு