சத்யமேவ ஜெயதே

இந்திய நாட்டின் தேசிய குறிக்கோள் உரை

சத்யமேவ ஜெயதே (தமிழ்: வாய்மையே வெல்லும், ஆங்கில மொழி: Truth alone triumphs) என்பது முண்டக உபநிடத்தின் புகழ்பெற்ற ஒரு மந்திரத்தின் ஒரு பகுதியாகும்.[1] இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து, 26 சனவரி 1950 அன்று, இந்தியா குடியரசாக மாறிய நாளில் இந்திய தேசிய குறிக்கோளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.[2][3]

இந்திய தேசிய இலச்சினையில் தேவநாகிரி எழுத்தில்"சத்யமேவ ஜெயதே" என்ற சொற்றொடருடன்.

இது அசோக சிங்கத் தூபியின் தலைப்பகுதியின் அடிவாரத்தில் தேவநாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது, இந்திய தேசிய இலச்சினையின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் உள்ளது. அனைத்து இந்திய ரூபாய்களிலும், தேசிய ஆவணங்களிலும் சின்னம் மற்றும் "சத்யமேவ ஜெயதே" என்ற சொற்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.

தோற்றம் மற்றும் பொருள் தொகு

இக்குறிக்கோள் முண்டக உபநிடதத்தில் 3.1.6வது மந்திரத்தில் உள்ளது. மந்திரமும் மொழிபெயர்ப்பும் பின்வருமாறு:

தேவநாகரி எழுத்துமுறையில்

सत्यमेव जयते नानृतं सत्येन पन्था विततो देवयानः।
येनाक्रमन्त्यृषयो ह्याप्तकामा यत्र तत् सत्यस्य परमं निधानम्॥[1]

எழுத்துப்பெயர்ப்பு
ஆங்கிலத்தில்

satyameva jayate nānṛtaṃ
satyena panthā vitato devayānaḥ
yenākramantyṛṣayo hyāptakāmā
yatra tat satyasya paramaṃ nidhānam[4]

தமிழில்

ஸத்யமேவ ஜயதே நாந்ருதம்
ஸத்யேன பந்தா2 விததோ தே3வயான: ।
யேனாக்ரமந்த்ய்ருஷயோ ஹ்யாப்தகாமா:
யத்ர தத்ஸத்யஸ்ய பரமம் நிதா4னம் ॥[5]

மொழிப்பெயர்ப்பு

சுவாமி குருபரானந்தர் வழங்கிய தமிழ் உரை:

வாய்மையே வெல்லும். பொய்மை வெல்லாது. எந்த ப்ரஹ்ம லோகத்தில் ஸத்யத்தினால் அடையப்படும் அந்த மேலான லக்ஷ்யம் உண்டோ.
அந்த லோகத்தை ஆசைகள் நீங்கிய ரிஷிகள் எந்தப் பாதையினால் அடைகிறார்களோ, அந்த ஒளி பொருந்திய பாதை ஸத்யத்தினால் அமைக்கப்பட்டுள்ளது.[5]

தமிழ்நாடு அரசு இலச்சினையில் தமிழாக்கம் தொகு

 
தேவநாகரி எழுத்தில் "சத்யமேவ ஜெயதே" என்றுள்ள பழைய தமிழக அரசு இலச்சினை

இந்தியா விடுதலை அடைந்த பிறகு, இந்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழ்நாடு அரசு இலச்சினையில் தேவநாகரி எழுத்தில் "சத்யமேவ ஜெயதே" என இருந்தது, இதை "வாய்மையே வெல்லும்" என்று 1967ஆம் ஆண்டு கா. ந. அண்ணாதுரை முதலமைச்சராக இருந்த காலத்தில் மாற்றப்பட்டது.[6][7]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Mundaka Upanishad". IIT Kanpur. Archived from the original on 4 June 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-06-04.
  2. "Motto for State Emblem" (PDF). Press Information Bureau of India - Archive. Archived from the original (PDF) on 8 August 2017. பார்க்கப்பட்ட நாள் 8 August 2017.
  3. Department related parliamentary standing committee on home affairs (2005-08-25). One hundred and sixteenth report on the state emblem of India (Prohibition of improper use) Bill, 2004. New Delhi: Rajya Sabha Secretariat, New Delhi. p. 6.11.1. http://164.100.47.5/book2/reports/home_aff/116threport.htm. பார்த்த நாள்: 2008-09-26. 
  4. "The Mundaka Upanishad with Shankara's Commentary". Wisdom Library. 21 February 2016. Archived from the original on 26 June 2020. பார்க்கப்பட்ட நாள் 12 December 2017.
  5. 5.0 5.1 ஸ்வாமி குருபரானந்த. உபநிஷத்துக்கள் [முண்டகோபநிஷத்]. பக். 59, 60. https://archive.org/details/UpanishadsTamil/02_Mundaka_Upanishad/. 
  6. "பேரறிஞர் அண்ணா நினைவிடம் மற்றும் பேரறிஞர் அண்ணா அருங்காட்சியகம்". செய்தி மற்றும் விளம்பரத்துறை முன்னெடுப்பு. பார்க்கப்பட்ட நாள் 2024-04-11.
  7. ரா. அரவிந்தராஜ் (2021-05-03). "Long Read - திமுக: அரை நூற்றாண்டுகள் கடந்தும் அழிக்க முடியாத அரசியல் அஞ்சான்! #TNelections2021". விகடன். பார்க்கப்பட்ட நாள் 2024-04-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யமேவ_ஜெயதே&oldid=3933473" இலிருந்து மீள்விக்கப்பட்டது