சந்திரிகா ராம்

சந்திரிகா ராம் (பிறப்பு 2 ஜூலை 1917) இந்தியாைவச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்தார். [1] பீகார் சட்டப் பேரவை உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். [2] [3]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

சந்திரிகா பீகார் மாநிலம் சரண் என்ற இடத்தில் பிறந்தார. அவர் கோரியாகோத்தி பள்ளியில் பயின்றார், பின்னர் பாட்னா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு உள்ளிட்ட உயர் கல்வியைத் தொடர்ந்தார். [4] தலித் சமூகத்தைச் சேர்ந்த மாநிலத்தில் முதல் சட்டப் பட்டதாரி இவர்தான். [5]

விடுதலைப் போராட்டம் தொகு

1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று கைதான இவர் இரண்டரை மாதங்கள் சிறைைவக்கப்பட்டார். முன்னதாக 1941 ஆம் ஆண்டு பீகார் மாகாண தாழ்த்தப்பட்டோர் கழகத்தின் செயலாளராகவும் பின்னர் அதன் தலைவராகவும் பணியாற்றினார். 1946 ஆம் ஆண்டு, இந்திய தேசிய காங்கிரசு சார்பில் பீகார் சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "Constituent Assembly OF INDIA - Debates". பார்க்கப்பட்ட நாள் 2023-09-16.
  2. "Chandrika Ram". பார்க்கப்பட்ட நாள் 2023-08-18.
  3. Government Gazette: The United Provinces of Agra and Oudh. https://books.google.com/books?id=GW1Vfrn0mTMC&dq=Chandika+Ram&pg=PA132. 
  4. (in en) India's Struggle Quarter of Century 1921-1946 Part II. https://books.google.com/books?id=RhspDwAAQBAJ&dq=Chandika+Ram&pg=PT438. 
  5. 5.0 5.1 "Chandrika Ram" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரிகா_ராம்&oldid=3833976" இலிருந்து மீள்விக்கப்பட்டது