சந்தை

need for market & classification market

சந்தை என்பது Market என்று அழைக்கப்படுகிறது. இது பொருள் வாங்குபவர்களும் விற்பவர்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய இடத்தை குறிக்கும். இது வாங்குபவரும் விற்பவர்களும் தொடர்பு கொள்ளும் இடத்தைக் குறிக்கும். ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விதமான சந்தை உள்ளது. எடுத்ததுக்காட்டாக பணச்சந்தை, பங்குச்சந்தை. ஓர் உற்பத்தியாளர், நேரடியாகச் சந்தையின் வழியே விற்பனை செய்தால், அவருக்கும், நுகர்வோருக்கும் இடையே உள்ள நெருக்கம் அதிகமாகிறது. இதில் உற்பத்தியாளர், இடைத்தரகர்களின் கருத்தை விட, நுகர்வோரின் கருத்துகள் மதிப்பு உள்ளதை உணர்வார்.

சந்தை

சந்தைகளின் இயல்புகள்

வாங்குபவர்கள், விற்பவர்களிடையே போட்டி காணப்படும்.

சந்தையின் பரப்பு தடையற்றவணிகம், விற்பனைத்திறன், விளம்பரம், போக்குவரத்துவசதிகள் போன்ற காரணிகள் சந்தையின் பரப்பினை விரிவடையச் செய்யும். அதிகமாக உள்ள பொருட்கள், நீண்டகால பயன் பொருட்கள், அதிகமாக உள்ள பொருட்கள் விரிவான சந்தையை விரிவடைய உதவும்

அதே நேரம் குறுகியகால பாவனையுள்ள பொருட்கள், அழியக்கூடிய பொருட்கள் உடனடியாக விற்கப்படும்.

சந்தைப்பகுப்புக்கள்

பொருட்களின் இயல்பின் அடிப்படையில்

விளைபொருட் சந்தை
உற்பத்திச் சந்தை

பரப்பின் அடிப்படையில்

உள்ளூர்ச்சந்தை  
தேசியச்சந்தை 
பன்னாட்டுச்சந்தை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தை&oldid=3504171" இலிருந்து மீள்விக்கப்பட்டது