சனா அமானத் (Sana Amanat) ஒரு அமெரிக்க காமிக் புத்தக ஆசிரியர். [1] அல்டிமேட் காமிக்ஸ்: ஸ்பைடர் மேன் மற்றும் கேப்டன் மார்வெல் ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க நூல்களில் அடங்கும். ​​இவர் தற்போது மார்வெல் காமிக்ஸில் உள்ளடக்கம் மற்றும் எழுத்து மேம்பாட்டு இயக்குநராக உள்ளார்.[2] முதன் முதலாக கதாநாயகியாக ஒரு முஸ்லிம் பெண் இடம்பெற்ற திருமதி மார்வெல் என்ற மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் முதல் தனித் தொடரை இவர் இணைந்து உருவாக்கினார். [3]

சனா அமானத்
பெண்கள் வரலாற்று மாதத்திற்கான வரவேற்பின் போது வெள்ளை மாளிகையின் நீல அறையில் "திருமதி மார்வெல் தொகுதி 1 இன் நகலை அதிபர் பராக் ஒபாமாவுக்கு அமானத் வழங்கினார்.
பிறப்பு1982
நியூ செர்சி, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
குடிமகன்அமெரிக்கர்
துறை (கள்)Editor
கவனிக்கத் தக்க வேலைகள்திருமதி மார்வெல், கேப்டன் மார்வெல்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

அமனாத் ஒரு பாக்கித்தானியக் குடும்பத்தில் பிறந்தார். இவர் தனது பெற்றோருடனும் மூன்று சகோதரர்களுடன், வெளிநாடு வாழ் பாக்கித்தானியர்களாக நியூ செர்சியின் புறநகரில் வசித்து வந்தார். தனது குழந்தைப் பருவம் முழுவதும், தனது சுய அடையாளத்துடன் பொருந்தி வாழ்வதில் இவருக்கு சிக்கல் இருந்தது. மேலும் இதற்காக பெருமளவில் போராடினார். [4]

2004 ஆம் ஆண்டில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பர்னார்ட் கல்லூரியில் மத்திய கிழக்கு அரசியலை மையமாகக் கொண்டு அரசறிவியலைப் படித்தார். [5]

தொழில் தொகு

கல்லூரிப் படிப்பு முடிந்ததும், இவர் சில வருடங்கள் பத்திரிகை பதிப்பகத்தில் பணியாற்றினார். பின்னர் "விர்ஜின் காமிக்ஸ்" என்ற இண்டி காமிக் புத்தக நிறுவனத்தில் பணிபுரிந்தார். அங்கு, அமானத் வரைகலை கதைசொல்லல் பற்றி அறிந்து கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் பணியாற்றிய நிறுவனம் வணிகத்திலிருந்து வெளியேறியது. [5]

இவரது அடுத்த தொழில் நடவடிக்கையாக 2009 இல் மார்வெல் காமிக்ஸில் சேர முடிவெடுத்தார். அமானத்தின் கூற்றுப்படி, மார்வெலில் ஒரு நிர்வாகப் பணிக்காக இவர் அவர்களை அணுகினார். ஏனெனில் இவர் மார்வெலின் சராசரி ஊழியரிடமிருந்து வேறுபட்டவராக இருந்ததுதான் காரணம். ஒரு குழந்தையாக இருந்தே காமிக்ஸைப் படித்த வழக்கமான ரசிகர்களைக் காட்டிலும் இவருக்கு வேறு ஏதாவது பணி வழங்குவதாக நிர்வாகி தன்னிடம் சொன்னதாக இவர் கூறினார். மேலும் தன்னுடைய பணிகள் வித்தியாசமானதாக உள்ளதாகவும், மார்வெலை மாற்ற அவர்களுக்கு தன்னுடைய பணி தேவையாக இருந்ததாகவும் தெரிவித்தார். இவர் தற்போது, மார்வெல் காமிக்ஸில் உள்ளடக்கம் மற்றும் எழுத்து மேம்பாட்டு இயக்குநராக உள்ளார். [5] 2014 ஆம் ஆண்டில், திருமதி மார்வெல் என்ற பெண் முஸ்லிம் நாயகி பாத்திரத்தைக் கொண்டுவருவதற்காக மார்வெலின் முதல் தனித் தொடரை இவர் இணைந்து உருவாக்கினார் . காமிக் நியூயார்க் டைம்ஸின் சிறந்த விற்பனையாளர்கள் பட்டியலில் பல வாரங்கள் இருந்ததது. மேலும் 2015 இல் சிறந்த வரைகலை கதைக்கான ஹியூகோ விருதையும் வென்றது. திருமதி. மார்வெல் கடைகளை விட டிஜிட்டல் முறையில் நன்கு விற்கிறது. சில சமயங்களில் ஒட்டுமொத்தமாக மார்வெலின் சிறந்த டிஜிட்டல் விற்பனையாக இருந்து வருகிறது.

உத்வேகம் தொகு

தனது டெட் பேச்சில், அமானத், " திருமதி. மார்வெலுக்குப் பின்னால் இருந்த பெரிய யோசனை சிறுபான்மை பிரதிநிதித்துவத்தைப் பற்றியது. பெரிய யோசனை உங்கள் உண்மையான சுயத்தைக் கண்டுபிடிப்பதாகும்" என்று கூறினார். காமிக் உருவாக்கும் போது, நியூ ஜெர்சி புறநகர்ப்பகுதிகளில் உள்ள வெளிநாடுவாழ் பாக்கித்தானியர்களின் குழந்தையாக தனது சொந்த அனுபவத்தை இவர் வெளிபடுத்தினார். ஒரு சூப்பர் நாயகி மூலம் இவர் செய்ததைப் போல அடுத்த தலைமுறை அடையாள நிராகரிப்பை அனுபவிக்காது. .[5]

காமிக்ஸ் தொகு

  • True Believers: Thanos Rising (2018)[6]
  • Generations: Ms. Marvel and Ms. Marvel (2017)[6]
  • The Mighty Captain Marvel (2017)[6]
  • Hawkeye (2016–2018)[6]
  • All-New Hawkeye (2015–2016)[6]
  • Captain Marvel & The Carol Corps (2015–present)[6]
  • Daredevil (2015–present)[6]
  • Giant-Size Little Marvel: AVX (2015–present)[6]
  • Max Ride: First Flight (2015–present)[6]
  • Ms. Marvel vol. 4 #1 – (November 2015–present)
    • Volume 5: Super Famous (tpb, 136 pages, 2016, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7851-9611-0)
      • "Super Famous" (with G.Willow Wilson, Adrian Alphona and Takeshi Miyazawa, in #1–3, 2015–2016)
      • "Army of One" (with G.Willow Wilson and Nico Leon, in #4–6, 2016)
      • "The Road to War" (with G.Willow Wilson and Adrian Alphona, in #7, 2016)
      • "Civil War II" (with G.Willow Wilson, Adrian Alphona and Takeshi Miyazawa, in #8-11, 2016)
      • "The Road to War" (with G.Willow Wilson and Mirka Andolfo, in #12, 2016)
      • "Election Day" (with G.Willow Wilson and Mirka Andolfo, in #13, 2016)
      • "Damage Per Second" (with G.Willow Wilson, Takeshi Miyazawa, and Nelson Blake II, in #14-17, 2017)
      • "Meanwhile in Wakanda" (with G.Willow Wilson and Francesco Gaston, in #18, 2017)
      • "Mecca" (with G.Willow Wilson, Marco Failla, Nelson Blake II, and Valerio Schiti, in #19-22, 2017)
      • "Northeast Corridor" (with G.Willow Wilson, Diego Olortegui, and Valerio Schiti, in #23-24, 2017)
  • Ms. Marvel vol. 3 #1–19 (with G. Willow Wilson and Adrian Alphona, February 2014 – October 2015)
  • Ultimate Spider-Man Infinite Digital Comic (2015–present)
  • All-New Hawkeye (2015)[6]
  • Elektra (2014–present)[6]
  • Rocket Raccoon (2014–present)[6]
  • Daredevil (2014–2015)[6]
  • Hawkeye (2012–2015)[6]

மேற்கோள்கள் தொகு

  1. Tahir, Sabaa (2014-02-04). "ESSAY: Why Muslim Ms. Marvel succeeds in her debut". The Washington Post (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-11-24.
  2. https://informationcradle.com/sana-amanat/
  3. "The badass woman who created Marvel's first Muslim superhero to headline her own series". Elle India. Archived from the original on 2021-02-28. பார்க்கப்பட்ட நாள் 2021-02-23.
  4. Cavna, Michael (June 17, 2016). "The Pakistani American Marvel editor who is trying to make comic books more diverse". The Washington Post. பார்க்கப்பட்ட நாள் 2017-11-24.
  5. 5.0 5.1 5.2 5.3 Thomson-DeVeaux, Amelia. "A New Kind of Superhero | Barnard College". barnard.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-11-24.
  6. 6.00 6.01 6.02 6.03 6.04 6.05 6.06 6.07 6.08 6.09 6.10 6.11 6.12 6.13 "Sana Amanat". Marvel Entertainment. பார்க்கப்பட்ட நாள் 2018-12-03.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சனா_அமானத்&oldid=3553243" இலிருந்து மீள்விக்கப்பட்டது