சனா சாஃபி (Sana Safi) ஆப்கானித்தான் நாட்டைச் சேர்ந்த ஓர் ஒளிபரப்பு பத்திரிகையாளர் ஆவார். தற்போது இவர் பிபிசி உலக சேவைக்காக பணிபுரிகிறார். 1989 ஆம் ஆண்டு இவர் பிறந்தார்.

சனா சாஃ
பிSana Safi
ثنا ساپۍ
பிறப்பு1989
காபுல்
பணிபத்திரிகையாளர், செய்தி வாசிப்பாளர், எழுத்தாளர்
பணியகம்பி.பி.சி
தொலைக்காட்சிபி.பி.சி. பாசுட்டோ

ஆரம்ப ஆண்டுகள் தொகு

சனா சாஃபி ஆப்கானித்தான் நாட்டின் தலைநகரமான காபூல் நகரத்தில் பிறந்தார். அங்குள்ள கந்தகார், எல்மண்டு நங்கர்கார் மற்றும் ஆப்கானித்தானின் பிற நகரங்களில் வளர்ந்தார்.[1] சாஃபியின் முதல் 18 வருடங்கள் ஆப்கானித்தானில் கழிந்தன. 1980 ஆம் ஆண்டுகளில் பொதுவுடமையின் கீழும் 1990 ஆம் ஆண்டுகளில் உள்நாட்டுப் போர் காலத்திலும் இவருடைய ஆப்கான் வாழ்க்கை கழிந்தது. தாலிபான்கள், சாஃபியின் குழந்தைப் பருவத்தைக் கொள்ளையடித்தார்கள்.

2007 ஆம் ஆண்டு ஆப்கானித்தானை விட்டு வெளியேறிய சபி தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வசித்து வருகிறார். [2] பாசுட்டோ, டாரி மற்றும் ஆங்கில மொழிகளில் இவர் சரளமாக பேசுகிறார்.

பத்திரிகை தொகு

சாஃபி இலண்டனில் வசித்து வருகிறார், அங்கு இவர் பிபிசியின் உலக சேவைக்கு வேலை செய்கிறார். பிபிசி ஆப்கானித்தானின் ஆப்கன் பெண் மணி திட்டம் மற்றும் முக்கிய நடப்பு விவகாரங்கள் ஒலிபரப்பில் பணிபுரிகிறார். முன்னதாக இவ்வொலிபரப்பில் சேருவதற்கு முன்பு இவர் கிழக்கு ஆப்கானித்தான் நகரமான இயலாலாபாத்தில் குழந்தைகள் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராகவும் மற்றும் தயாரிப்பாளராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

இவர் தற்போது ஒரு வாசிப்பாளர் பிபிசி பாசுட்டோ மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சி 30 நிமிடங்கள் ஒலிபரப்பாகிறது.[3] உள்ளூர் பிராந்திய மற்றும் சர்வதேச செய்திகள் இந்நிகழ்ச்சியில் ஒலிபரப்பு செய்யப்படுகின்றன. [4] ஆப்கானித்தானின் லெபனான்-அமெரிக்க முதல் பெண்மணியான ரூலா கானியுடன் தனது முதலாவது நேர்காணல் நிகழ்ச்சியில் இவர் பேட்டி கண்டார். ரூலா கானியின் கணவர் அசுரப் கானி அக்மத்சாய் பதவியேற்ற பிறகு அவருடன் பேசிய முதல் பத்திரிகையாளர் சாஃபி ஆவார்.

பிபிசி நியூசு பாசுட்டோ ஆப்கானித்தான் மற்றும் பாக்கித்தானில் உள்ள பெண்களுக்கு தேவையான முக்கியமான செய்திகளை ஆராயும் உள்ளடக்கம் கொண்ட ஒரு நிகழ்ச்சி பருவத்தை வெளியிட்ட்து. எட்டு பாகங்கள் கொண்ட லெட்சு டாக் என்பது அந்நிகழ்சியாகும். சனா சாஃபி இலண்டன், காபூல் மற்றும் பிற இடங்களில் உள்ள முக்கிய விருந்தினர்களுடன் குடும்ப வன்முறை, பெண் அடையாளம், பெண்கள் உரிமை, பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் போன்ற செய்திகளைப் பற்றி விவாதிக்கிறார்.

எழுதுதல் தொகு

சாஃபியின் பத்திரிகை வேலைகளுடன், இவர் கற்பனையான எழுத்துக்களுக்கு பெயர் பெற்றவராவார். முக்கியமாக சிறுகதைகளை எழுதுகிறார். இவரது சொந்த நாடான ஆப்கானித்தானில் இச்சிறுகதைகள் பரவலாக வெளியிடப்பட்டன. பெரும்பாலும் இவரது சிறுகதைகள் ஓர் இளம் சுதந்திர முசுலீம் பெண்ணின் கதையைச் சொல்கின்றன. இவர் தனது நாட்டின் ரகசியங்கள் மற்றும் மரபுகள் அனைத்தையும் அறிந்திருக்கிறார். மேற்கத்திய சமூகத்திலும் மிகவும் நன்றாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மற்றும் மேற்கின் மாறுபட்ட அம்சங்களையும் மனித இனத்தின் ஒற்றுமைகளையும் இவர் பேசுகிறார். பின்னணியையும் வளர்ப்பையும் கருத்தில் கொண்டு சாஃபியின் கதைகளில் சில அடிப்படை சமூகப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க தயங்குவதில்லை. ஓர் இளம் மேற்கத்தியரின் பொருத்தம் பார்க்க பழகுதல், சமூகமயமாக்கல் மற்றும் தினசரி வாழ்க்கை போன்ற சர்ச்சைக்குரிய தலைப்புகள் இவருடைய கதைகளில் பேசப்படுகின்றன. பெண்களுக்கு எதிரான பாலியல் மற்றும் உடல் ரீதியான வன்முறைகள் பற்றியும் இவர் பல தலைப்புகளில் எழுதியுள்ளார். [5]

மேற்கோள்கள் தொகு

  1. "It's not easy being a Pashtun woman in the media". PakTribune. 21 February 2013 இம் மூலத்தில் இருந்து 17 அக்டோபர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141017095342/http://blogs.tribune.com.pk/story/16046/its-not-easy-being-a-pashtun-woman-in-the-media/. பார்த்த நாள்: 10 October 2014. ""Working as a Pashtun female is not easy in any field," said one of my Pashtun journalist friends, Sana Safi." 
  2. "Emotional return to a changing Afghanistan". BBC Afghan Service. 18 October 2014. https://www.bbc.com/news/world-middle-east-29619583. பார்த்த நாள்: 18 October 2014. "On a cold November morning in 2007, I had kissed my family goodbye and left for Kabul airport – destination: London." 
  3. News, News on. "BBC to Air Live TV News Bulletin in Pashto - News on News". newsonnews.com. பார்க்கப்பட்ட நாள் 30 சனவரி 2016. {{cite web}}: |last= has generic name (help)
  4. "BBC Pashto on TV now- multimedia". BBC Pashto.
  5. "Short Story: Life and Death by Sana Safi -culture". Taand. Archived from the original on 5 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 15 செப்டெம்பர் 2021. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சனா_சாஃபி&oldid=3553245" இலிருந்து மீள்விக்கப்பட்டது