சபீர் யூனுசோவ்

உசுபெக் வேதியியலாளர்

சபீர் யூனுசோவிச் யூனுசோவ் (Sabir Yunusovich Yunusov) ஒரு சோவியத்-உசுபெக்கிசு வேதியியலாளர் ஆவார். உருசியரான இவர் 1909 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 18 ஆம் நாள் தாசுகண்டு நகரில் பிறந்தார். ஆல்கலாய்டு வேதியியல் ஆராய்ச்சிக்காக இவர் நன்கு அறியப்படுகிறார். 1971 ஆம் ஆண்டு இவரது ஆராய்ச்சிக்காக இவருக்கு திமீத்ரி இவனோவிச் மெண்டெலீவ் பதக்கம் வழங்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டு சபீர் உசுபெக் எசு.எசு.ஆர் அறிவியல் அகாடமியின் கீழ் தாவர பொருட்களின் வேதியியல் என்ற நிறுவனத்தை நிறுவினார். 1991 ஆம் ஆண்டு முதல் இந்நிறுவனம் உசுபெக்கிசுத்தானுக்கு சொந்தமானதாக உள்ளது[1].1958 ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை சபீர் சோவியத் உருசியாவின் அறிவியல் அகாடமியில் உறுப்பினராக இருந்தார்[2]. 1995 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் நாள் சபீர் இறந்தபோது உசுபெக்கிசுத்தானின் தாசுகண்டில் புதைக்கப்பட்டார்.

மேற்கோள்கள் தொகு

  1. Urmanov, Ruslan (2007-08-31). "Those who can make a difference". Uzbekistan Today. Uzbekistan Today. Archived from the original on 2010-03-28. பார்க்கப்பட்ட நாள் 2007-10-08.
  2. "RAS member entry". Russian Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 2007-10-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபீர்_யூனுசோவ்&oldid=2932691" இலிருந்து மீள்விக்கப்பட்டது