சமத்துவ குமுகங்களின் கூட்டமைப்பு

சமத்துவ குமுகங்களின் கூட்டமைப்பு (Federation of Egalitarian Communities) என்பது சமத்துவ (egalitarian) திட்டக் குமுகங்களின் ஒரு கூட்டமைப்பு ஆகும். இதில் ஆறு திட்டக் குமுகங்கள் இனைந்துள்ளன.

கொள்கைகள் தொகு

  1. நிலம், உழைப்பு, வருமானம், மற்றும் பிற வளங்களை பொதுவில் வைத்திருத்தல்
  2. உறுப்பினர்களின் தேவைகளுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ளல். அவர்களின் உழைப்பை பெற்றுக் கொண்டு அதையும் பிற பொருட்களையும் சமமாகவும் தேவைக்கு ஏற்றவாறும் பகிர்தல்.
  3. வன்முறையின்மை கடைப்பித்தல்
  4. அனைத்து உறுப்பினரும் பங்களிக்க சமனான வாய்ப்புத் தரும் ஒரு மடிவெடுக்கும் முறையைப் பயன்படுத்தல். இணக்க முடிவு, வாக்கெடுப்பு அல்லது மேல் முறையீடு, முறையீடு மறுப்பு ஆகியவை ஊடாக அந்த வாய்ப்புக்களை உறுதிசெய்தல்.
  5. எல்லா மக்களுமிடையே சமத்துவதை ஏற்படுத்துவதற்கான செயற்படுதல். இனம், வர்க்கம், நம்பிக்கை, வயது, பால், பாலியல் அமைவு அல்லது பாலியல் அடையாளம் ஆகிய எவற்றின் அடிப்படையிலும் பாகுபாட்டை அனுமதிப்பது இல்லை.
  6. இன்றைய, நாளைய தலைமுறையினருக்கு ஆக இயற்கை வளங்களை பேணல். சூழலியல் விழிப்புணர்வை, செயல்முறைகளை மேம்படுத்தல்.
  7. குழுத் தொடர்பாடல்களுக்கும், பங்கேற்புக்கும் ஏற்றா செயலாக்கங்களை உருவாக்கல். நபர்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் சூழலை வழங்கல்.


வெளி இணைப்புகள் தொகு