சமாரியம் பாசுபைடு

சமாரியம் பாசுபைடு (Samarium phosphide) என்பது SmP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். சமாரியமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. சமாரியத்தின் பாசுபைடு சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும். [1][2][3]

சமாரியம் பாசுபைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பாசுபேனைலிடின் சமாரியம், சமாரியம் மோனோபாசுபைடு
இனங்காட்டிகள்
12066-50-1
EC number 235-069-8
InChI
  • InChI=1S/P.Sm
    Key: QRVXKVFNBYFEOG-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82905
  • P#[Sm]
பண்புகள்
PSm
வாய்ப்பாட்டு எடை 181.3
தோற்றம் படிகங்கள்
அடர்த்தி 6.3 கி/செ.மீ3
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு தொகு

சமாரியத்தையும் பாசுபரசையும் சேர்த்து சூடுபடுத்தினால் சமாரியம் பாசுபைடு உருவாகிறது.

Sm + P → SmP

இயற்பியல் பண்புகள் தொகு

சமாரியம் பாசுபைடு கனசதுர திட்டத்தில் Fm3m என்ற இடக்குழுவில் அலகு அளவு a = 0.5760 நானோமீட்டர், Z = 4, என்ற அளபுருக்களுடன் படிகங்களாக உருவாகிறது. இப்படிகத்தின் கட்டமைப்பு சோடியம் குளோரைடின் கட்டமைப்பை ஒத்ததாக உள்ளது. [4] 1315 -2020 பாகை செல்சியசு வெப்பநிலையில் இச்சேர்மம் தோன்றுகிறது. [5]

வேதிப் பண்புகள் தொகு

சமாரியம் பாசுபைடு நைட்ரிக் அமிலத்துடன் சேர்ந்து எளிதில் சிதைவடைகிறது. [6]

பயன்கள் தொகு

உயர் ஆற்றல் நிலை, உயர் அலைவரிசை பயன்பாடுகள், சீரொளி மற்றும் இதர ஒளியியல் இருமுனையங்களில் சமாரியம் பாசுபைடு ஒரு குறைக்கடத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது. [1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Samarium Phosphide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 21 December 2021.
  2. Toxic Substances Control Act (TSCA) Chemical Substance Inventory (in ஆங்கிலம்). U.S. Government Printing Office. 1979. p. 49. பார்க்கப்பட்ட நாள் 21 December 2021.
  3. Freeman, A. J. (2 December 2012). The Actinides: Electronic Structure and Related Properties (in ஆங்கிலம்). Elsevier. p. 201. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-15304-1. பார்க்கப்பட்ட நாள் 21 December 2021.
  4. Donnay, Joseph Désiré Hubert (1963). Crystal Data; Determinative Tables (in ஆங்கிலம்). American Crystallographic Association. p. 888. பார்க்கப்பட்ட நாள் 21 December 2021.
  5. Predel, B. (1998). "P-Sm (Phosphorus-Samarium)". Ni-Np – Pt-Zr. Landolt-Börnstein - Group IV Physical Chemistry (in ஆங்கிலம்). p. 1. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/10542753_2381. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-61712-4. பார்க்கப்பட்ட நாள் 21 December 2021. {{cite book}}: |website= ignored (help)
  6. Soviet Progress in Chemistry (in ஆங்கிலம்). Faraday Press. 1966. p. 91. பார்க்கப்பட்ட நாள் 21 December 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமாரியம்_பாசுபைடு&oldid=3369695" இலிருந்து மீள்விக்கப்பட்டது