சம்சாமா பூங்கா

பாக்கித்தான் நாட்டின் கராச்சியில் உள்ள ஒரு பூங்கா

சம்சாமா பூங்கா (Zamzama Park) பாக்கித்தான் நாட்டின் சிந்து மாகாணத்திலுள்ள ஒரு பூங்காவாகும். கராச்சி நகரில் உள்ள இராணுவ வீட்டுவசதி ஆணையத்தின் 5 ஆவது பகுதியில் இப்பூங்கா 26 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

சம்சாமா பூங்கா
Zamzama Park
زمزمہ پارک
சம்சாமா பூங்காவில் நடைபாதை
அமைவிடம்இராணுவ வீட்டுவசதி ஆணையம், கராச்சி, சிந்து மாகாணம், பாக்கித்தான்.
பரப்பு26 ஏக்கர்கள்
Administered byஇராணுவ வீட்டுவசதி ஆணையம்

இங்கு மெல்லோட்டப் பாதைகள், நடை பாதைகள், உருளிச்சறுக்கி பகுதிகள், புத்துணர்வுப் பகுதி, மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவை உள்ளன. இரண்டாவது நுழைவாயிலுக்கு அருகில் காட்சி மையம் மற்றும் பாக்கித்தான் பொன்சாய் சங்கத்தின் தலைமை அலுவலகம் ஆகியவையும் அமைந்துள்ளன.[1][2][3]

சம்சாமா என்பது பாக்கித்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் உள்ள கிளிஃப்டன் நகரில் அமைந்துள்ள ஓர் ஆடம்பரமான பகுதியாகும். குடியிருப்பு வசதிகளுடன் மிகவும் வளர்ச்சியடைந்த வணிகப் பகுதியாக இது கருதப்படுகிறது. பிரபலமான வணிகப்பெயர் அடையளங்கள் கொண்ட கடைகள் இப்பகுதியில் உள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. Zamzama Park. பரணிடப்பட்டது செப்டெம்பர் 7, 2012 at the வந்தவழி இயந்திரம் Pakistan Defence Officers Housing Authority - Karachi. Retrieved 11 August 2012.
  2. Zamzama Park. Paktive. Retrieved 11 August 2012.
  3. "Home - Pakistan Bonsai Society". Pakistan Bonsai Society (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-12-05.

புற இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்சாமா_பூங்கா&oldid=3330298" இலிருந்து மீள்விக்கப்பட்டது