சம்பந்தன் (எழுத்தாளர்)

கந்தையா திருஞானசம்பந்தன் (20 அக்டோபர் 1913 - 7 சனவரி 1995) என்னும் இயற்­பெயர் கொண்ட சம்­பந்தன் ஈழத்தின் சிறுகதை எழுத்தாளரும், கவிஞரும் ஆவார்.

கந்தையா திருஞானசம்பந்தன்
பிறப்பு(1913-10-20)20 அக்டோபர் 1913
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
இறப்புசனவரி 7, 1995(1995-01-07) (அகவை 81)
தேசியம்இலங்கைத் தமிழர்
மற்ற பெயர்கள்சம்பந்தன்
பணிஆசிரியர்
அறியப்படுவதுசிறுகதை எழுத்தாளர், கவிஞர்
பெற்றோர்கந்தையா,
இராசமணி

வாழ்க்கைக் குறிப்பு தொகு

சம்பந்தன் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் கந்தையா, இராசமணி ஆகியோருக்குப் பிறந்தார். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் மாணாக்கர். திருநெல்வேலி சைவ வித்தியாசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார்.[1]

எழுத்தாளராக தொகு

சம்பந்தனின் முதலாவது சிறுகதை தாராபாய் 1938 ஆம் ஆண்டில் கலைமகளில் வெளிவந்தது. இவரது 11 சிறுகதைகள் கலைமகளில் வெளிவந்துள்ளன.[1] இது தவிர மறுமலர்ச்சி, கலைச்செல்வி, கிராம ஊழியன், ஈழகேசரி ஆகிய இதழ்களிலும் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன. 1966 ஆகத்து மாத விவேகி இதழ் "சம்பந்தன் சிறுகதை மலராக" அவரது ஐந்து சிறுதைகளைத் தாங்கி வெளிவந்தது. இலங்கை இலக்கியப் பேரவை 1998 ஆம் ஆண்டில் சம்பந்தன் சிறுகதைகள் என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டது. இத்தொகுதியில் 10 சிறுகதைகள் அடங்கியிருந்தன.[1]

1960களில் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 1963 ஆம் ஆண்டில் இவர் எழுதித் தயாராக வைத்திருந்த சாகுந்தல காவியம் 1987 ஆம் ஆண்டிலேயே நூலாக வெளிவந்தது. கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன் இந்நூலுக்கு அணிந்துரையும், பண்டிதமணி ஆசியுரையும் வழங்கியிருந்தனர்.[1]

இறுதிக் காலம் தொகு

1990 ஆம் ஆண்டில் இலண்டனுக்குப் புலம்பெயர்ந்து சென்றார். அங்கிருந்து அவர் எழுதிய பாவிய மகளிர் எழுவர் பற்றிய நூல் தர்மவதிகள் என்ற தலைப்பில் அவர் இறந்த பின்னர் 1997 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இந்நூலுக்கு பேராசிரியர் கா. சிவத்தம்பி அணிந்துரை வழங்கியிருந்தார்.[1]

நினைவு தொகு

சம்பந்தனின் நினைவாக ஆண்டுதோறும் "சம்பந்தன் விருது" எனும் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது.

எழுதிய நூல்கள் தொகு

  • சாகுந்தல காவியம் (1987)
  • தர்மவதிகள் (1997)
  • சம்பந்தன் சிறுகதைகள் (1998)

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 ஈழத்தமிழ் சிறுகதை மூலவர் சம்பந்தன், வீரகேசரி வாரமலர், நவம்பர் 17, 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பந்தன்_(எழுத்தாளர்)&oldid=2981109" இலிருந்து மீள்விக்கப்பட்டது