சம்பாகுளம் பச்சு பிள்ளை

இந்திய கதகளி விரிவுரையாளர்

சம்பகுளம் பச்சு பிள்ளை (Champakulam Pachu Pillai) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த ஒரு கதகளி விரிவுரையாளர் ஆவார். இவர் கதகளியில் தாடியுள்ள வேடங்களில் நிபுணராக இருந்தார். [1] சங்கீத நாடக அகாடமி விருது 1983, கேரள சங்கீத நாடக அகாடமி விருது 1969 மற்றும் கேரள கலாமண்டலம் விருது 1991 உட்பட பல குறிப்பிடத்தக்க விருதுகளைப் பெற்றுள்ளார்.

சம்பாகுளம் பச்சு பிள்ளை
Champakulam Pachu Pillai
பிறப்பு1907
சம்பாகுளம், திருவிதாங்கூர், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்புமே 10, 2004
தேசியம்இந்தியர்
பணிகதகளி கலைஞர்
பெற்றோர்கைப்பிள்ளை சங்கரபிள்ளை, மாதவியம்மா
விருதுகள்சங்கீத நாடக அகாதமி விருது, கேரள மாநில கதகளி விருது, கேரள சங்கீத நாடக அகாதமி விருதும் உறுப்பினர் விருதும்

வாழ்க்கைக் குறிப்பு தொகு

பச்சு பிள்ளை கேரளாவில் உள்ள ஆலப்புழை மாவட்டம் சம்பாகுளம் கிராமத்தில் இருந்த பெருமனூர் குடும்பத்தில் கைப்பிள்ளை சங்கரப்பிள்ளா மற்றும் மாதவியம்மா தம்பதியருக்கு மூத்த மகனாக 1907 ஆம் ஆண்டு பிறந்தார்.[2] தென் சிட்டா என்று அழைக்கப்படும் கப்ளிஞ்செடல் கதகளிச்சிட்டாவின் முக்கிய வம்சாவளியில் ஒன்று பெருமானூர் குடும்பம் ஆகும்.[2] பிரபல நடனக் கலைஞரும் நடன இயக்குனருமான குரு கோபிநாத் இவரது இளைய சகோதரர் ஆவார். [2] பச்சு பிள்ளை தனது 14 ஆவது வயதில் தாய் மாமா சம்பகுளம் சங்கு பிள்ளையிடம் கதகளி கற்கத் தொடங்கினார். இவர் தனது 16 ஆவது வயதில் நெடுமுடி மாத்தூர் பகவதி கோவிலில் ருக்மணிசுயம்வரம் கதகளி நிகழ்ச்சியில் ருக்மனாக அறிமுகமானார். [2] குருவின் விருப்பப்படி, பச்சு பிள்ளை மாத்தூர் கதகளி யோகத்தில் சேர்ந்தார், அதில் இவரும் உறுப்பினராக இருந்தார். [2] 1993 ஆம் ஆண்டு தில்லியில் சங்கீத நாடக அகாடமி நடத்திய கதகளி விழாவை பச்சு பிள்ளை துவக்கி வைத்தார். [2]

பச்சு பிள்ளையின் குறிப்பிடத்தக்க பாத்திரங்களில் துச்சாதனன், வாலி, திரிகர்தன் பகன், காளி மற்றும் நக்ரதுண்டி போன்ற முரட்டுத்தனமான மற்றும் வீரமான பாத்திரங்கள் போன்றவையும் அடங்கும். [2]

பச்சு பிள்ளை மே 10, 2004 அன்று தனது 98 ஆவது வயதில் இறந்தார்.

விருதுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Lal, Ananda (2004). "Pillai, Champakulam Pachu". The Oxford Companion to Indian Theatre (in ஆங்கிலம்). Oxford University Press. doi:10.1093/acref/9780195644463.001.0001/acref-9780195644463-e-0493.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 MOHAN, T. SASI. "താടി വേഷത്തിന്‍റെ കരുത്ത്:ചമ്പക്കുളം". malayalam.webdunia.com (in மலையாளம்).
  3. 3.0 3.1 "Biography of Eminent Nairs". www.nairs.in.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பாகுளம்_பச்சு_பிள்ளை&oldid=3375391" இலிருந்து மீள்விக்கப்பட்டது