சரஞ்சித் கவுர் பஜ்வா

இந்திய அரசியல்வாதி

சரஞ்சித் கவுர் பஜ்வா (Charanjit Kaur Bajwa) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருமாவார். இவர் பஞ்சாப் சட்டமன்றத்தில் காதியன் தொகுதி உறுப்பினராக இருந்தார்.[1] இவர் முன்னாள் பஞ்சாப் பிரதேச காங்கிரசு கமிட்டி தலைவரும், குர்தாஸ்பூரைச் சேர்ந்த மக்களவையின் முன்னாள் உறுப்பினருமான பிரதாப் சிங் பஜ்வாவின் (இப்போது மாநிலங்களவை உறுப்பினர்) மனைவியாவார்.[2]

சரஞ்சித் கவுர் பஜ்வா
சட்டப் பேரவை உறுப்பினர், பஞ்சாப்
பதவியில்
2012 -
முன்னையவர்லக்பீர் சிங் லோதினங்கல்
தொகுதிகாதியன் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 சூன் 1959 (1959-06-25) (அகவை 64)
பட்டியாலா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்பிரதாப் சிங் பஜ்வா
பிள்ளைகள்விக்ரம் பிரதாப் பஜ்வா
வாழிடம்(s)காதியன், பஞ்சாப் (இந்தியா)

அரசியல் வாழ்க்கை தொகு

காதியன் தொகுதியிலிருந்து பஜ்வா 2012 ல் பஞ்சாப் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]. சட்லெஜ்-யமுனா இணைப்பு நீர் கால்வாயை அரசியலமைப்பிற்கு விரோதம் எனக்கூறி அதை நிறுத்திய இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தங்கள் பதவியிலிருந்து விலகிய 42 காங்கிரசு சட்ட மன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "List of winner and runner-up candidates". The Tribune. http://www.tribuneindia.com/2012/20120307/punjab-poll1.htm#6. பார்த்த நாள்: 10 May 2013. 
  2. "Seniors skip Bajwa's Golden Temple visit Despite 'diktat'". The Tribune. 17 March 2013. http://www.tribuneindia.com/2013/20130317/punjab.htm#4. பார்த்த நாள்: 10 May 2013. - "In Punjab, it's all in the family". The Hindu. 7 January 2012. http://www.thehindu.com/news/national/other-states/in-punjab-its-all-in-the-family/article2781332.ece. பார்த்த நாள்: 10 May 2013. 
  3. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2012 TO THE LEGISLATIVE ASSEMBLY OF PUNJAB" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.
  4. "SYL verdict: 42 Punjab Congress MLAs submit resignation", Indian Express, 11 November 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரஞ்சித்_கவுர்_பஜ்வா&oldid=3453994" இலிருந்து மீள்விக்கப்பட்டது