வானியலில் சரிவு (declination) என்பது (குறியீடு: δ) வானக்கோளத்தின் மத்தியக் கோட்டின் ஆயத் திட்டத்தில் ஒரு புள்ளியை இருப்பிடங்காணப் பயன்படும் இரு கோணங்களில் ஒன்றாகும். நேரக்கோணம் என்பது மற்றொன்றாகும். வானநடுவரையிலிருந்து தெற்கு அல்லது வடக்காக அளக்கப்படுவது சரிவுக்கோணம் ஆகும். இது இருப்பிடங்காண வேண்டியப் புள்ளி வழியாக நேர வட்டினூடே அளக்கப்படுகிறது.[1]

வானக்கோளத்தின் உள்ளே வல எழுச்சிக் கோணம் மற்றும் சரிவு காட்டப்பட்டுள்ளது.

விளக்கம் தொகு

வானியலில் சரிவு என்பது புவியியலில் நிலநேர்க்கோடுடன் ஒப்பிடப்படுகிறது. நேரக்கோணம் என்பது நிலநிரைக்கோடுடன் ஒப்பிடப்படுகிறது. [2] வானநடுவரையிலிருந்து வடக்கு நோக்கி இருக்கும் புள்ளிகள் நேர்மறை சரிவு எனவும், தெற்கு நோக்கி இருக்கும் புள்ளிகள் எதிர்மறை சரிவு எனவும் அழைக்கப்படுகிறது. கோணத்தை அளக்கும் அலகுகளே சரிவையும் அளக்கப் பயன்படுகிறது. பாகை ( ° ), நிமிடம் ( ' ), நொடி ( " ) ஆகியவை அறுபதின் கூறாகப் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக 90° என்பது வட்டத்தில் கால் பகுதியாக உள்ளது. சரிவின் அதிக பட்சக் கோணம் 90° ஆகும். ஏனெனில் துருவங்களே வானக்கோளத்தின் வடக்கு மற்றும் தெற்கு எல்லைப் புள்ளிகளாக உள்ளன.

ஒரு பொருள்

வானநடுவரை கோட்டிலிருந்தால், அதன் சரிவுக் கோணம் 0°

வானக்கோளத்தின் தென் துருவத்திலிருந்தால், அதன் சரிவுக் கோணம் +90°

வானக்கோளத்தின் வட துருவத்திலிருந்தால், அதன் சரிவுக் கோணம் −90°

இருக்குமிடத்தைப் பொறுத்து நேர்மறை அல்லது எதிர்மறை குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

முன்செலவத்தின் விளைவுகள் தொகு

 
வானக்கோளத்தின் வெளியிலிருந்து பார்க்கும் போது வல எழுச்சிக் கோணம் (நீல நிறம்) மற்றும் சரிவு (பச்சை நிறம்).

புவியின் அச்சு கிரகணத்திற்குரியகோட்டிலிருந்து மெதுவாக மேற்கு நோக்கி நகர்கிறது. ஒரு அச்சில் தொடங்கி மீண்டும் அதை அடைய 26,000 ஆண்டுகள் ஆகிறது. இது அச்சு சார்ந்த முன்செலவம் என அழைக்கப்படுகிறது. இதனால் நிலையான வானியல் பொருட்களின் அச்சுகள் தொடர்ந்து மாறிக்கொண்டே உள்ளது. ஆனால் இந்த மாற்றம் மிக மெதுவாக நடைபெறுகிறது. அதனால் வானநடுவரை அச்சு அமைப்பை (சரிவையும் சேர்த்து) அளக்கும் ஆண்டை ஒரு குறிப்பிட்ட ஆண்டுடன் ஒப்பிட்டு வானியிலாளர்கள் குறித்து வைக்கின்றனர். அந்த குறிப்பிட்ட ஆண்டை தொடக்கக் கட்டம் என வானியலில் அழைக்கப்படுகிறது. இந்த நிலையான தொடக்கக் கட்டத்திலிருந்து கணக்கிடுவதன் மூலம், இன்றைய அச்சுகளின் இருப்பிடம் காணப்படுகிறது.

1 சனவரி 2000 12:00 புவி நேரம் என்பது தற்போதைய நிலையான தொடக்கக் கட்டமாகக் கொள்ளப்படுகிறது. இதற்கு முன்னர் 1950 ஆம் ஆண்டை நிலையான தொடக்கக் கட்டமாகக் கொண்டிருந்தனர்.[3]

நட்சத்திரங்கள் தொகு

நட்சத்திரங்கள் வெகு தொலைவில் உள்ளதால் அவை ஒரே இடத்தில் இருப்பது போல் தெரிகிறது. ஆனால் வல எழுச்சிக் கோணம் மற்றும் சரிவுக் கோணம் ஆகியவை தொடர்ந்து மாறிக் கொண்டே உள்ளது. அச்சார்ந்த முன்செலவம் மற்றும் சீரான (கோள்)இயக்கம் ஆகியவற்றின் காரணமாகவும் உடுவினிடமாறுதோற்றம் காரணமாகவும் இந்த மாற்றம் நிகழ்கிறது. நட்சத்திரங்களை ஒப்பிடும் போது சூரியக் குடும்பத்திலுள்ளப் பொருட்களின் சரிவுக் கோணம் விரைவாக மாறுகிறது. ஏனெனில் அவை அருகில் உள்ளன.

புவியின் வடக்கு அரைக்கோளத்தின் ஏதேனும் ஒரு புள்ளியிலிருந்து சரிவுக் கோணம் 90° − φ என கணக்கிடப்படும். (இதில் φ = பார்ப்பவரின் அட்சரேகை) இவை தொடுவானத்திற்கு கீழேயுள்ளது. புவியின் தெற்கு அரைக்கோளத்தின் ஏதேனும் ஒரு புள்ளியிலிருந்து சரிவுக் கோணம் −90° − φ என கணக்கிடப்படும். (இதில் φ = பார்ப்பவரின் அட்சரேகை எதிர்மறையிலுள்ளது) இவை தொடுவானத்திற்கு மேலேயுள்ளது.

சூரியன் தொகு

சூரியனின் சரிவுக் கோணங்கள் பருவ காலத்தைப் பொறுத்து மாறுபடுகின்றன. ஆர்க்டிக் அல்லது ஆன்டார்டிக் அட்சரேகைகளில் பார்க்கும் போது, கோடைச்சூரியகணநிலைநேரத்தில் சூரியன் சுற்று துருவத்திற்கு அருகிலுள்ளது. நள்ளிரவில் சூரியன் தொடுவானத்திற்கு சற்று மேலே உள்ளது. அதனையே நாம் நள்ளிரவுச் சூரியன் என்கிறோம். அதே போல் மாரிச்சூரியகணநிலைநேரத்தில் சூரியன் தொடுவானத்திற்கு சற்று கீழேயுள்ளது. இதனை துருவ இரவு என்கிறோம்.

அட்சரேகையுடன் தொடர்பு தொகு

ஒரு பொருள், பார்ப்பவரின் அட்ச ரேகை, தலைக்கு மேலே இருக்கும் போது, அதன் சரிவுக் கோணம் 0.01 டிகிரிக்கும் குறைவாகவே இருக்கும். இதில் இரண்டு சிக்கல் நிலைகள் உள்ளன.[4][5]

முதல் சிக்கல் நிலை என்பது அனைத்து வானியல் சார் பொருட்களுக்கும் பொருந்தும். பொருளின் சரிவுக் கோணமும், பார்ப்பவரின் வானியல் சார் அட்ச ரேகையும் சமமாக இருக்கும். புவி அளவியலில் உள்ள அட்ச ரேகையே இங்கும் பயன்படுத்தப்படுகிறது.[6]

இரண்டாவது சிக்கல் நிலை என்பது, பார்வையாளரின் இருப்பிடத்திற்கு செங்குத்தாக சரிவு விலகல் ஏதும் இல்லை.[7]

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. U.S. Naval Observatory, Nautical Almanac Office (1992). P. Kenneth Seidelmann. ed. Explanatory Supplement to the Astronomical Almanac. University Science Books, Mill Valley, CA. பக். 724. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-935702-68-7. https://archive.org/details/explanatorysuppl0003unse. 
  2. Moulton, Forest Ray (1918). An Introduction to Astronomy. New York: Macmillan Co.. பக். 125, art. 66. https://books.google.com/?id=PJoUAQAAMAAJ. 
  3. see, for instance, U.S. Naval Observatory Nautical Almanac Office, Nautical Almanac Office; U.K. Hydrographic Office, H.M. Nautical Almanac Office (2008). "Time Scales and Coordinate Systems, 2010". The Astronomical Almanac for the Year 2010. U.S. Govt. Printing Office. பக். B2,. 
  4. "Celestial Coordinates". www.austincc.edu. பார்க்கப்பட்ட நாள் 2017-03-24.
  5. baylor.edu
  6. "USDOV2009". Silver Spring, Maryland: U.S. National Geodetic Survey. 2011.
  7. P. Kenneth Seidelmann, தொகுப்பாசிரியர் (1992). Explanatory Supplement to the Astronomical Almanac. Sausalito, CA: University Science Books. பக். 200–5. 

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரிவு&oldid=3794380" இலிருந்து மீள்விக்கப்பட்டது