சவரன் சிங் (Sawarn Singh)(பஞ்சாபில் ਸਵਰਨ ਸਿਂਘ) ஓர் இந்தியப் படகோட்ட வீரர் ஆவார்.[1] இவர் இந்தியப் பஞ்சாபில் மான்சாவில் தலேல்வாலா என்ற இடத்தில் 1990, பிப்ரவரி 20 இல் பிறந்தார். இவர் தனித்துடுப்பு படகோட்டத்தில் கலந்துகொள்கிறார். இவர் 2012 கோடைக்கால ஒலிம்பிக்கில் ஆடவர் தனித்துடுப்பு படகோட்டத்தில் கலந்துகொண்டு எட்டாவதாக வந்தார் (7:00.49, 2;கி.மீ). இவர் இலண்டன் ஒலிம்பிக்கில் ஆட கொரியாவில் சுங் யூ ஆசியக் கண்ட ஒலிம்பிக் தகுதிக்கான நிகழ்வில் தேர்வாகினார். இவர் தன் 21 ஆம் அகவையிலேயே, தனித்துடுப்புப் படகோட்டத்தில் பெருவிளையாட்டு நிகழ்விலும் கலந்துகொள்ளும் தகுதி பெற்றார்.

சவரன் சிங் விர்க்
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு20 பெப்ரவரி 1990 (1990-02-20) (அகவை 34)
தலேல்வாலா மான்சா, பஞ்சாப், இந்தியா
உயரம்188 செமீ
எடை80 கிலோ
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுRowing
நிகழ்வு(கள்)ஆடவர் தனித் துடுப்போட்டம்
சாதனைகளும் விருதுகளும்
உலக இறுதி2011, கலப்பு, 17 ஆவது;
ஒலிம்பிக் இறுதி2012, கலப்பு, 12 ஆவது;

ஜார்க்காண்டு தேசிய விளையாட்டுத் தங்கப் பதக்கம் பெற்ற இவரது கன்னி ஒலிம்பிக் நுழைவு இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுகளில் தொடங்கியது.[2][3] 2015 இல் அருச்சுனா விருது வென்றவர்.

முதன்மை விளையாட்டுகள் தொகு

விளையாட்டு இடம் வகுப்பு நேரம் நிலை
2011உலகப் படகோட்டப் போட்டிகள் சுலொவேனியா கலப்பு 07:04.79 17
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இலண்டன் கலப்பு 7:29.66 16
2013 15th ஆசிய முதுநிலை போட்டியாளர் சீனா கலப்பு 7:31.88 1(தங்கப் பதக்கம் பெற்றவர்)
2014 ஆசிய விளையாட்டுகள் தென்கொரியா கலப்பு 07:10.65 3

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சவரன்_சிங்&oldid=2151954" இலிருந்து மீள்விக்கப்பட்டது