சாகீத் லத்தீப்

இந்தியத் திரைப்பட இயக்குநர்

சாகீத் லத்தீப் ( Shaheed Lateef ) (11 ஜூன் 1913 - 16 ஏப்ரல் 1967) பாலிவுட் திரைப்பட இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரும் மற்றும் தயாரிப்பாளரும் ஆவார். தேவ் ஆனந்தின் வாழ்க்கையைத் தொடங்கிய ஜித்தி (1948) மற்றும் திலிப் குமார் மற்றும் காமினி கௌஷல் நடித்த அர்ஸூ (1950) போன்ற படங்களை இவர் தயாரித்துள்ளார்..

சாகீத் லத்தீப்
பிறப்பு(1913-06-11)11 சூன் 1913
சந்தௌசி, ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு16 ஏப்ரல் 1967(1967-04-16) (அகவை 53)
பணிஇயக்குநர், திரைக்கதை ஆசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1941–1967
வாழ்க்கைத்
துணை
இசுமத் சுகதாய்

ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி தொகு

இவர் சாதத் ஹசன் மாண்டோவுடன் நட்புடன் இருந்தார்.[1] ஆனாலும் இசுமத் சுகதாய் (1915-1991) என்ற உருது எழுத்தாளரை 1941 இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருந்தனர்.[2]

தொழில் தொகு

மும்பை சென்ற லத்தீப் இந்தித் திரையுலகின் புகழ்பெற்ற திரைப்பட அரங்கமான பாம்பே டாக்கீஸில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கு அசோக் குமார் நடித்த நயா சன்சார் (1941), தொடர்ந்து அமியா சக்ரவர்த்தியின் அஞ்சான் (1941) மற்றும் கியான் முகர்ஜியின் ஜூலா (1941 போன்ற படத்திற்கு உரையாடல்களை எழுதினார். தனது மனைவி இசுமத் கத்தாயின் கதை எழுத ஜித்தி (1948) என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த திரைப்படம் நடிகர் தேவ் ஆனந்தின் வாழ்க்கையையும் நிலை நிறுத்தியது.[3] கணவன் மனைவி இருவரும் பல படங்களில் இணைந்து பணியாற்றினார்கள்.

இறப்பு தொகு

சாகீத் லத்தீப் 1967 ஏப்ரல் 16 அன்று மகாராட்டிராவின் மும்பையில் இறந்தார்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகீத்_லத்தீப்&oldid=3878352" இலிருந்து மீள்விக்கப்பட்டது